Who you are to say remove the dinakaran - by thanga tamilselvan

அதிமுகவை விட்டு டிடிவி தினகரன் விலக வேண்டும் என அதிமுக எம்பி கோ.ஹரி கூறியதற்கு அதை சொல்ல நீங்கள் யார் என தங்க தமிழ்செல்வன் எம்.எல்.ஏ பதிலடி கொடுத்துள்ளார்.

இரட்டை இலையை மீட்க லஞ்சம் கொடுத்த வழக்கில் சிறைக்கு சென்று வந்த டிடிவி தினகரனை எடப்பாடி தலைமையிலான அமைச்சரவை கட்சியை விட்டு நீக்கியதாக அறிவித்தது.

இதைத்தொடர்ந்து கட்சி பணியில் தொடர்ந்து நீடிப்பேன் தினகரன் பேட்டியளித்தார். இதனால் ஆத்திரமடைந்த ஒ.பி.எஸ் அணி இனி பேச்சுவார்த்தைக்கே இடமில்லை என கூறி குழுவை கலைத்தது.

இதையடுத்து எடப்பாடி தலைமையிலான அரசு யாருடைய சசிக்லாவின் ஆலோசனையை பெறாமலேயே குடியரசு தலைவர் தேர்தலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்து தன்னிச்சையாக முடிவெடுத்தார்.

இதனால் ஆத்திரமடைந்த தினகரன் கோஷ்டி கடுமையாக கண்டனம் தெரிவித்தது.

மேலும் தாமாகவே முன்வந்து பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்தார் டிடிவி தினகரன். இதைதொடர்ந்து எடப்பாடி தரப்புஅதிமுக எம்பியான கோ.ஹரி திருத்தணியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அதிமுகவை விட்டு டிடிவி தினகரன் விலக வேண்டும் என்றும் சசிகலாவையும், தினகரனையும் ஒதுக்கிவைப்பதில் அதிமுகவில் ஒருமித்த கருத்து நிலவுகிறது என்றும் தெரிவித்தார்.

லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை தனது சொந்த கருத்துகளை கூறி குழப்பத்தை ஏற்படுத்துவதாகவும், சசிகலா குறித்து தம்பிதுரை கூறுவது அவரது தனிப்பட்ட கருத்து என்றும் கோ.ஹரி கூறியிருந்தார்.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த எம்.எல்.ஏ தங்கதமிழ்செல்வன் தினகரனை கட்சியில் இருந்து விலக சொல்ல நீங்கள் யார் என கேள்வி எழுப்பியுள்ளார்.