Asianet News TamilAsianet News Tamil

திணறடிக்கும் தினகரன்! எதிர்த்து நிற்கும் எடப்பாடி! - இறுதியில் வெல்லப்போவது யார்? உச்சகட்ட பரபரப்பில் தமிழகம்!

Who will eventually win?
Who will eventually win?
Author
First Published Aug 28, 2017, 1:06 PM IST


ராணுவ கட்டுப்பாடு - இந்த வார்த்தை சில நாட்டு ராணுவங்களுக்கு பொருந்துகிறதோ இல்லையோ, ஜெயலலிதா இருந்தவரை அந்த வார்த்தைக்கேற்றார்போல மிகுந்த கட்டுப்பாடோடுதான் அதிமுக இருந்தது.

ஆனால், அவர் மறைந்த சில நாட்களிலேயே சந்தி சிரிக்கும் வகையில் காங்கிரசை மிஞ்சும் அளவுக்கு கோஷ்டிகளின் கூடாரமாகி போனது அதிமுக.

சசிகலா - தீபா கோஷ்டி

சசிகலா - ஓ.பி.எஸ். கோஷ்டி

தினகரன் - ஓ.பி.எஸ். கோஷ்டி

தினகரன் - திவாகரன் கோஷ்டி (தற்போது இணைந்த கரங்கள்)

தினகரன் - எடப்பாடி கோஷ்டி

ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். - தினகரன் கோஷ்டி

இப்படி கோஷ்டிகளுக்கு பஞ்சமில்லாமல் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக தமிழகத்தில் கூத்துகள் அறங்கேறி வருகிறது. இவ்வளவு அலங்கோலங்களையும் ஜெயலலிதா பார்த்திருந்தால் கட்சியைக் களைத்திருப்பார். 

இந்த நிலையில்தான் 22 எம்எல்ஏக்களை உறுதியாக கையில் வைத்திருக்கும் தினகரன் கோஷ்டியினர், தொடர்ந்து எடப்பாடி ஆதரவாளர்களை கட்சி பதவியில் இருந்து தூக்கி அடித்து வருகின்றனர்.

இதன் உச்சமாக, எடப்பாடி பழனிச்சாமியையே பதவியில் இருந்தது நீக்கியதுதான் ஹைலைட். ஒவ்வொரு நாளும் தினகரன் தரப்பு அதிரடிகள் அதிகரித்த வண்ணமே உள்ளதால் ஆடிப்போய் விட்டது எடப்பாடி தரப்பு.

தினகரனுக்கும், சூத்திரதாரியாக இருக்கும் சசிகலாவுக்கும் 'செக்' வைக்கும் விதமாக இன்று அவசர அவசரமாக அதிமுக உயர்நிலைக் குழு கூட்டம், ராயப்பேட்டையில் உள்ள அதன் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., உள்ளிட்டோர்
கலந்து கொண்டனர்.

எனது ஆதரவு மாவட்ட செயலாளர்களை நீக்குகிறாயா? உங்களையும் உங்கள் சித்தியையுமே கட்சியை விட்டு நாங்கள் ஒதுக்க முடிவு செய்து விட்டோம் என கொக்கரிக்கின்றனர் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., கூட்டத்தில் பங்கேற்ற ஆதரரவாளர்கள்.

இப்படி, பதவி பொறுப்பில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்க, மற்றொரு புறம் நாசா எனும் நாஞ்சில் சம்பத்தும் பெங்களூரு புகழேந்தியும், வாய்க்கு வந்தபடி முதலமைச்சர் எடப்பாடியையும் மற்ற அமைச்சர்களையும் விமர்சனம் செய்து வருவது தனி டிராக்.

ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு, பெரிய அளவில் மத்திய அரசின் ஆதரவு இருப்தாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதிகாரத்தில் அசூர சக்தியோடு எடப்பாடி இருந்தாலும் 113 எம்எல்ஏக்கள் மட்டுமே அவரிடம் உள்ளனர். 

திமுகவின் கோரிக்கையை ஏற்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் மெஜாரிட்டியை நிரூபிக்க முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

போகிற போக்கைப் பார்த்தால், தினகரனின் 20 ஆதரவு எம்எல்ஏக்கள், மிகப்பெரிய தலைவலியை எடப்பாடிக்கு உருவாக்குவார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

அதிமுக எடப்பாடி - தினகரன் கோஷ்டிகளுக்கிடையே நடைபெறம் அதிகார சண்டையில் தமிழக அரசியல் களம், உச்சகட்ட சூடு மற்றும் பரபரப்பில் தகித்துக் கொர்ணடிருக்கிறது.

திண்டுக்கல் சீனிவாசன் கூறியதுபோல, இந்த அரசியல் நாடகம் கிளைமாக்ஸ் பகுதிக்கு வந்துள்ளது. இன்னும் ஒருசில நாட்களில் முடிவு தெரிந்து விடும். எடப்பாடியை தினகரன் திணறடிப்பாறா? அல்லது எடப்பாடி எகிறி அடிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்...!

Follow Us:
Download App:
  • android
  • ios