Asianet News TamilAsianet News Tamil

பிரதமர் மோடியை போட்டுத்தள்ளுவேன் என்று பேசியவருக்கு ஆப்பு...!! ரவுண்டு கட்டி தூக்கிய போலீஸ்...!!

பெரம்பலூர் லப்பைக்குடிகாட்டில் ஆகஸ்ட் 23ம் தேதி விளக்கக்கூட்டம் நடைபெற்றது. அதில் திருச்சி மாவட்ட மாணவரணி செயலாளர் முகமது ஷரீப் பங்கேற்று பேசினார். அப்போதுது தான், பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவதூறாகவும், அச்சுறுத்தும் விதமாக பேசினார்  அதை யாரோ ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பரப்பியதால் ஷெரிப்பை போலீசில் சிக்கிக் கொண்டார்.

who threatening prime minister modi, arrest in trichy
Author
Trichy, First Published Aug 29, 2019, 10:56 AM IST

இஸ்லாமியர்களை குறிவைக்கும் பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா ஆகியோரின் தலைகளை வெட்டுவேன் என்று பேசிய நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.who threatening prime minister modi, arrest in trichy

சமீபத்தில் சமூக வலைதளங்களில் மேடையில் நின்றபடி ஒரு இஸ்லாமிய இளைஞர் மிக ஆவேசமாக பேசும் வீடியோ ஒன்று வேகமாக பரவியது, அதில் பேசும் அந்த  இளைஞர், பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவை ஒருமையில் பேசுவதுடன், இஸ்லாமியர்களை குறிவைத்துதான் நாங்கள் இந்தந்த நடவடிக்கைகளை எடுக்கிறோம் என்று வெளிப்படையாக அவர்கள் கூறியிருந்தால்  இந்நேரத்திற்கு அவர்களின் தலைகளை வெட்டியிருப்போம் என்று அந்த இளைஞர் பேசுகிறார். அவர்களின் பேச்சு சமூகவலைதளங்களில் வேகமாப பரவியது, அவர்களின் பேச்சு காண்போரை முகம் சுளிக்க வைப்பதாக இருந்ததுடன் வன்முறையை தூண்டும் வகையில் உள்ளது என பலர் கண்டனம் தெரிவித்து வந்தனர். who threatening prime minister modi, arrest in trichy

இப்படி பேசிய அந்த இளைஞரை உடனே போலீசார் கைது செய்ய வேண்டு என பாஜகவின் சார்பில் புகார் கொடுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக்கழகத்தின் திருச்சி மாவட்ட மாணவரணி செயலாளர் முகமது ஷரீப் என்பது தெரிய வந்தது. முத்தலாக், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக்கழகத்தின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதனையொட்டி, பெரம்பலூர் லப்பைக்குடிகாட்டில் ஆகஸ்ட் 23ம் தேதி விளக்கக்கூட்டம் நடைபெற்றது.who threatening prime minister modi, arrest in trichy

 அதில் திருச்சி மாவட்ட மாணவரணி செயலாளர் முகமது ஷரீப் பங்கேற்று பேசினார். அப்போதுது தான், பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவதூறாகவும், அச்சுறுத்தும் விதமாக பேசினார்  அதை யாரோ ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பரப்பியதால் ஷெரிப்பை போலீசில் சிக்கிக் கொண்டார். இந் நிலையில்  ஷெரிப் மீது வழக்குப்பதிவு செய்த மங்கலமேடு போலீசார் முகமது ஷரீப்பை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios