Asianet News TamilAsianet News Tamil

ராகுல் காந்தியா? மம்தாவா? மாயவதியா? யார் பிரதமர் வேட்பாளர்? எதிர்கட்சிகள் எடுத்த அதிரடி முக்கிய முடிவு !!

who is the pM candidate in opposite party decided
who is the pM candidate in opposite party decided
Author
First Published Aug 4, 2018, 11:48 AM IST


அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்கட்சிகள் சார்பில் யார் பிரதமர் வேட்பாளர் என்பது குறித்து பல்வேறு யூகங்கள் எழும்பி வரும் நிலையில், தேர்தலுக்கும் பின் பிரதமரை தேர்ந்தெடுத்துக் கொள்ள எதிர் கட்சிகள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

2019 மக்களவைத்  தேர்தலில் தேசிய அளவில் பாஜகவுக்கு எதிராக வலுவான கூட்டணியை அமைக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. எதிர்க்கட்சிகள் இடையே கூட்டணி குறித்த பேச்சு சுமூகமாக நடந்து வந்தாலும், பிரதமர் வேட்பாளர் யார் என்ற பேச்சு எழும்போது பிரச்னையே நிலவுகிறது.

who is the pM candidate in opposite party decided

பிரதமர் வேட்பாளர் யார் என்ற ஆலோசனை பிரிவினையை ஏற்படுத்தி, கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தும் என்பதால் மக்களவை தேர்தலுக்கு பிறகு யார் பிரதமராக வேண்டும் என்பதை தீர்மானித்து கொள்ளலாம் என்ற முடிவுக்கு எதிர்க்கட்சிகள் வந்துள்ளதாக காங்கிரஸ் கட்சி  வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பாஜகவை எப்படியாவது வீழ்த்துவது ஒன்று தான் எதிர்கட்சிகளின் நோக்கம் என்பதால் முக்கிய மாநிலங்களில் கூட்டணி பேச்சுவார்த்தை மும்முரமாக நடந்து வருகிறது.

திரிணாமுல் காங்., தலைவர் மம்தா பானர்ஜி  காங்கிரஸ்  தலைவர்களான ராகுல், சோனியாவை சந்தித்து பேசி உள்ளார். தேசியவாத காங்கிரஸ் , தலைவர் சரத் பவார், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியை சந்தித்து பேசி உள்ளார்.

who is the pM candidate in opposite party decided

பாஜக க்கு எதிராக ஓட்டு வங்கியை அதிகரிக்கவும், விவசாயிகள் பிரச்னை, வேலைவாய்ப்பு இன்மை, தலித்துகள் விவகாரம் போன்றவற்றை கையில் எடுத்து மோடி அரசின் தோல்விகளை முன்வைத்து பிரசாரம் செய்யவும் எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

உ.பி., பீகார், மகாராஷ்டிராவில் 168 லோக்சபா தொகுதிகள் உள்ளதால். இந்த 3 மாநிலங்களில் பா.ஜ.,வுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைத்தால் மீண்டும் பிரதமராவதை மோடி மறந்து விட வேண்டும் என காங்கிரஸ்  மூத்த தலைவர்கள் கூறி வருகின்றனர்.

who is the pM candidate in opposite party decided

மாநில கட்சிகளை ஒன்றிணைப்பதுடன், பாஜக கூட்டணியில் இருந்து விலகிய மற்றும் பாக மீது அதிருப்தியில் இருக்கும் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதை முதன்மையானதாக கொண்டு காங்கிரஸ்,  திரிணாமுல் காங்கிரஸ் போன்ற கட்சிகள் கூட்டணி பேச்சை நடத்தி வருகின்றன.

Follow Us:
Download App:
  • android
  • ios