Asianet News TamilAsianet News Tamil

நாட்டின் நம்பர்ஒன் முதல்வர் நவீன் பட்நாயக்..மக்கள் ஆதரவு குறைந்த முதல்வர்கள் பட்டியலில் மம்தா, நிதிஷ், ஈபிஎஸ்!

 இந்தக் கருத்துக்கணிப்பு ஆய்வில் நாட்டிலேயே ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் 97 சதவீத ஆதரவு பெற்று முதலிடத்தைப் பிடித்தார். காங்கிரஸ் ஆளும் சட்டீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகல் இரண்டாமிடத்தையும், கேரள முதல்வர் பினராயி விஜயன் மூன்றாமிடத்தையும் பிடித்துள்ளதாக கருத்துக்கணிப்பு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

Who is the Number one chief minister in india?
Author
Delhi, First Published Jun 4, 2020, 8:37 AM IST

இந்தியாவில் மாநில முதல்வர்களில் மக்கள் ஆதரவு அதிகம் பெற்றவர்களில் ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக் இடம் பிடித்துள்ளார். மம்தா பானர்ஜி, எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் மக்கள் ஆதரவு இல்லாதவர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.

Who is the Number one chief minister in india?
 நாட்டின் பாப்புலரான தலைவர் குறித்து ‘ஸ்டேட் ஆப் தி நேஷன்’ என்ற பெயரில் கருத்துக்கணிப்பு நடத்தியதுபோலவே, மக்கள் ஆதரவு பெற்ற மாநில முதல்வர்கள் குறித்தும் ஐ.ஏ.என்.எஸ்-சி வோட்டர் நாடு முழுவதும் கருத்து கணிப்பு நடத்தின. இந்தக் கருத்துக்கணிப்பு ஆய்வில் நாட்டிலேயே ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் 97 சதவீத ஆதரவு பெற்று முதலிடத்தைப் பிடித்தார். காங்கிரஸ் ஆளும் சட்டீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகல் இரண்டாமிடத்தையும், கேரள முதல்வர் பினராயி விஜயன் மூன்றாமிடத்தையும் பிடித்துள்ளதாக கருத்துக்கணிப்பு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 Who is the Number one chief minister in india?
இவர்களைத் தொடர்ந்து மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால், கர்நாடக முதல்வர் எடியூரப்பா ஆகியோர் மக்களின் ஆதரவை பெற்றுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.Who is the Number one chief minister in india?  

அதேவேளையில் மக்கள் செல்வாக்கு குறைந்த முதல்வர்கள் பட்டியலில் பாஜக ஆளும் ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டார், காங்கிரஸ் ஆளும் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் ஆகியோரைத் தொடர்ந்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இடம்பிடித்துள்ளனர், இதே பட்டியலில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், பீகார் முதல்வர் நிதிஷ் குமார் உள்ளிட்டோரும் இடத்தைப் பிடித்துள்ளதாக கருத்துக்கணிப்பு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios