Asianet News TamilAsianet News Tamil

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் நாங்க ஜெயிச்சா யார் முதலமைச்சர் தெரியுமா ? தங்க தமிழ்செல்வன் அதிரடி !!

எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் நாங்கள் ஜெயித்தால் முதல் வேலையாக முதலமைச்சரை மாற்றவதுதான் என்றும், ஏற்கனவே அமமுக துணைப் பொதுச் செயலாளர் கூறியது போல் 18 எம்எல்ஏக்களில் யாராவது ஒருவர்  புதிய முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்படலாம் என தங்கத் தமிழ் செல்வன் தெரிவித்துள்ளார்

who is the  next cm for tn told thangatamil selvan
Author
Nellai, First Published Oct 23, 2018, 7:12 PM IST

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீது நம்பிக்கையில்லை என்று டிடிவி தினகரன் அணியைச் சேர்ந்த 18 எம்எல்ஏக்கள் அப்போதைய ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் மனு அளித்தனர். 

who is the  next cm for tn told thangatamil selvan

இதையடுத்து கொறடா உத்தரவை மீறி செயல்பட்டதாக 18 பேரையும் சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதனை எதிர்த்து 18 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் கடந்த ஜனவரி மாதம் 30 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. வழக்கை விசாரித்த அப்போதைய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியும், நீதிபதி சுந்தரும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். இரண்டு நீதிபதிகளும் வெவ்வேறு தீர்ப்புகள் வழங்கியதால் இந்த வழக்கு விசாரணை 3-வது நீதிபதியாக நியமனம் செய்யப்பட்ட சத்யநாராயணாவிடம் வழங்கப்பட்டது. 

who is the  next cm for tn told thangatamil selvan

இந்த வழக்கில் தீர்ப்பு விரைவில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் இன்னும் ஓரிரு நாட்களில் தீர்ப்பு வெளியாகும் என கூறப்படுகிறது. இதையடுத்து டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தற்போது குற்றாலத்தில் தங்கியுளனர். இன்று அவர்கள் பாபநாசம் சென்று தாமிரபரணி ஆற்றில் புனித நீராடினர்.

who is the  next cm for tn told thangatamil selvan

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய தங்க தமிழ்செல்வன், 18 எம்எல்ஏக்கள் பதவி நீக்க வழக்கில் நல்ல தீர்ப்பு வந்து தமிழகத்திற்கு நல்லது பிறக்க வேண்டும் என்பதற்காக நீராடி யாகம் வளர்த்து வழிபடுகிறோம் என தெரிவித்தார்.

who is the  next cm for tn told thangatamil selvan

தொடர்ந்து பேசிய அவர், எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் நாங்கள் ஜெயித்தால் முதல் வேலையாக முதலமைச்சரை மாற்றவதுதான் என்றும், ஏற்கனவே அமமுக துணைப் பொதுச் செயலாளர் கூறியது போல் 18 எம்எல்ஏக்களில் யாராவது ஒருவர்  புதிய முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்படலாம் எனவும் தங்கத் தமிழ் செல்வன் அதிரடியாக தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios