தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக மாபெரும் வெற்றி பெறும் என்றும், முதல்வர் யார் என்பதை சட்டமன்ற உறுப்பினர்கள் கூடி தேர்வு செய்வார்கள் என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். 

தமிழக அரசியலில் பரபரப்பான முக்கியத்துவம் வாய்ந்த கருத்துகளை தெரிவிப்பதில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ  முக்கியத்துவம் பெறுகிறது. அதேபோல, இன்றைய செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் செல்லூர் ராஜூ சில கருத்துகளை தெரிவித்துள்ளார். குறிப்பாக அவரிடம் 2 முக்கிய கேள்விகள் முன்வைக்கப்பட்டது. அதில், ஒன்று சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில் அடுத்த அதிமுகவில் அடுத்த முதல்வராக யார் இருப்பார் என்று கேள்வி எழுப்பப்பட்டது.

இது தொடர்பாக மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில் 1967ம் ஆண்டு தேர்தலிலேயே பேரறிஞர் அண்ணாவை முதல்வராக தேர்வு செய்தது  சட்டமன்ற உறுப்பினர்கள் தான். அதேபோல், புரட்சி தலைவர் கட்சி உருவாக்கிய பிறகு அவர் தன்னை முதலமைச்சர் வேட்பாளர் என்று சொல்வில்லை. மக்கள் சொன்னார்கள். அதே மாதிரி ஜெயலலிதாவையும் சொன்னார்கள். அதிமுக கொள்கையை பொறுத்தவரையில் சட்டமன்ற உறுப்பினர்கள் கூடி யாரை முதலமைச்சர் என்று அறிவிக்கிறார்களோ அவர் தான் முதல்வர். இதில், எந்த மாற்று கருத்தும் இல்லை. இதை உல்லாம் சொல்லி அதிமுகவில் எந்த குழப்பமும் ஏற்படுத்த முடியாது என்று கூறியுள்ளார். 

ஆனாலும், தற்போது அதிமுகவில் ஓபிஎஸ், இபிஎஸ் இரட்டை தலைமை தற்போது கட்சியை வழி நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நேரடியாக எடப்பாடி பழனிசாமி தான் அடுத்த முதல்வர் என்றும், பன்னீர்செல்வம் தான் அடுத்த முதல்வர் என்றோ அவர் தெரிவிக்கவில்லை. முழுக்க முழுக்க அதை தீர்மானிக்கக்கூடிய சக்தியாக சட்டமன்ற உறுப்பினர்கள் தான் இருப்பார்கள் என்றார்.