Asianet News TamilAsianet News Tamil

BreakingNews: அதிமுக முதல்வர் வேட்பாளர் யார்..? ஓ.பி.எஸ்- எடப்பாடி இணைந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

ஆளும் அதிமுகவில் முதல்வர் வேட்பாளராக யார் ? முன்னிறுத்தப்படுவார்கள் என்பது குறித்த விவாதங்கள் கடந்த சில வாரங்களாகவே சூடுபிடித்து வந்த நிலையில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 

Who is the AIADMK Chief Minister candidate? Official announcement with OPS-Edappadi ..!
Author
Tamilnadu, First Published Oct 7, 2020, 9:51 AM IST

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். 

தமிழகத்தில் வரும் 2021 ஆம் ஆண்டில் சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது. சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே எஞ்சியுள்ளதால் தற்போதே  அரசியல் களம் விறுவிறுப்படைந்து வருகிறது.  ஆளும் அதிமுகவில் முதல்வர் வேட்பாளராக யார் ? முன்னிறுத்தப்படுவார்கள் என்பது குறித்த விவாதங்கள் கடந்த சில வாரங்களாகவே சூடுபிடித்து வந்தது. 

குறிப்பாக இந்த விவகாரம் இடையே அதிமுகவின் செயற்குழு கூட்டத்தில் ஓபிஎஸ்- ஈபிஎஸ் இடையே கருத்து மோதல் ஏற்பட்டதாக தகவல் வெளியானது அக்கட்சியினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது. செயற்குழு கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி, அதிமுக முதல்வர் வேட்பாளர் யார் என்பது அக்டோபர் 7 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று கூறினார். 

அதிமுக-வில் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்த ஆலோசனை இன்று அதிகாலை வரை தொடர்ந்தது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரிடையே மாறி மாறி 9 மணி நேரம் நிர்வாகிகள் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். அதன் பின் செய்தியாளர்களை சந்திப்பு நடைபெற்றது.

அப்போது செய்தியாளர்கள் சந்திப்பின்போது ஓ.பிஎஸ். எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக அறிவித்தார். அப்போது 2021சட்டமன்ற தேர்தலுக்கான அதிமுக முதல்வர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தற்போதய தமிழக முதல்வர் எடப்பாடியாருக்கு கட்சியினர் வாழ்த்து தெரிவித்தனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios