ஜூலை 25-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை நடத்தப்பட்ட இந்த கருத்து கணிப்பில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் உள்ள, அனைத்து பகுதிகளுக்கும் நமது குழுவினர் சென்று, அறிவியில் ரீதியான கருத்து கணிப்புகளை நடத்தினர். 

தமிழ்நாட்டில் கடந்த அரைநூற்றாண்டுக்கும் மேலாக திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகள் மட்டுமே மாறி மாறி ஆட்சியமைத்து வந்துள்ளன. தமிழ்நாட்டு அரசியலில்  உடல்நலம் குன்றி ஓய்வில் இருக்கும் கருணாநிதி மற்றும் மறைந்த ஜெயலலிதா என களத்தில் ஆளுமைகள்  இல்லாத நிலையில்,  ரஜினி மற்றும் கமல் ஆகிய இருவரும் அரசியல் பிரவேசம் எடுத்துள்ளனர். 

ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு தமிழக அரசியல் சூழல் மாற தொடங்கியுள்ளது. தமிழக அரசியல் களத்தில் தமிழ் சினிமாவின் இரு பெரும் ஜாம்பவான்களான சூப்பர் ஸ்டார், உலகநாயகன் ஆகிய இருவரில் மக்களிடத்தில் யாருக்கு அதிக ஆதரவு இருக்கிறது என்பதை படி தெரிந்து கொள்ள மொத்தம் 11,691 பேரிடம் நடத்தப்பட்ட இந்த கருத்து கணிப்பில் சுமார் 25-க்கும் மேற்பட்ட சாதியினர் மற்றும் மதத்தினரிடம் சரி விகிதத்தில் விரிவாக கேள்விகள் எழுப்பப்பட்டது. தமிழகத்தை 5 மண்டலங்களாக பிரித்து சர்வே மேற்கொள்ளப்பட்டது.  வீடியோவில் பார்ப்போம்.