Asianet News TamilAsianet News Tamil

#BreakingNews: தமிழகத்தில் அடுத்து ஆட்சி அமைக்கப்போவது யார்... வெளியானது exitpoll கருத்து கணிப்பு..!

மக்கள் நீதி மய்யம் ஓரிடத்திலும், அமமுக ஒரு தொகுதியிலும், மற்றவை 2 இடங்களிலும் வெற்றி பெறும் எனக்கூறப்பட்டுள்ளது.

Who is going to form the next government in Tamil Nadu ... Exitpoll poll released ..!
Author
Tamil Nadu, First Published Apr 29, 2021, 7:11 PM IST

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமான தேர்தல் நடைபெற்றது. அதில் 71.43 சதவிகித வாக்குகள் பதிவாயின. அதிமுக கூட்டணியில், அதிமுக 179 தொகுதிகளில் தனித்து களம் இறங்கியது. பாட்டாளி மக்கள் கட்சி 23 தொகுதிகளிலும், பாஜக 20 தொகுதிகளிலும், தமிழ் மாநில காங்கிரசு 6 தொகுதிகளிலும், பெருந்தலைவர் மக்கள் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், புரட்சி பாரதம், மூவேந்தர் முன்னேற்றக் கழகம், மூவேந்தர் முன்னணிக் கழகம் மற்றும் பசும்பொன் தேசிய கழகம் ஆகியவை தலா 1 தொகுயில் களம் கண்டன.Who is going to form the next government in Tamil Nadu ... Exitpoll poll released ..!

மு.க.ஸ்டான் தலைமையிலான திமுக கூட்டணியில், திமுக 173 தொகுதிகளிலும், காங்கிரஸ் 25 தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக ஆகிய கட்சிகள் தலா 6 தொகுதிகளிலும், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் தலா 3 தொகுதிகளிலும், மனித நேய மக்கள் கட்சி 2 தொகுதிகளிலும், ஃபார்வார்ட் பிளாக் கட்சி, தமிழக வாழ்வு உரிமை கட்சி, மக்கள் விடுதலை கட்சி, ஆதித்தமிழர் பேரவை ஆகியவை தலா 1 தொகுதியிலும் களம் கண்டன.Who is going to form the next government in Tamil Nadu ... Exitpoll poll released ..!

இதேபோல, நடிகர் கமல்ஹாசன் தலைமையில் ஒரு கூட்டணியும், டிடிவி தினகரன் தலைமையில் ஒரு கூட்டணியும் அமைக்கப்பட்டது. நாம் தமிழர் கட்சியின் சீமான் 234 தொகுதிகளிலும் தனித்து களம் இறங்கினார். இதனால் 5 முனைப் போட்டி நிலவுகிறது.Who is going to form the next government in Tamil Nadu ... Exitpoll poll released ..!

ABP-Cvoter Exit Poll Results 2021 கருத்துக்கணிப்புப்படி Live: 2021 தமிழக சட்டமன்றத் தேர்தல் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளின் படி திமுக கூட்டணி 166 தொகுதிகளிலுன், அதிமுக 64 இடங்களிலும் வெற்றி பெறும் எனவும், மக்கள் நீதி மய்யம் ஓரிடத்திலும், அமமுக ஒரு தொகுதியிலும், மற்றவை 2 இடங்களிலும் வெற்றி பெறும் எனக்கூறப்பட்டுள்ளது. இந்தக் கருத்துக் கணிப்பின்படி திமுக ஆட்சி அமைக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios