Asianet News TamilAsianet News Tamil

கமலஹாசன் ஊரில் யார் கெத்து..? யார் வெத்து..? அனல் பறக்கும் அதிமுக..!

தென்மாவட்டங்களில் உள்ள சட்ட மன்றத் தொகுதிகளில் பரமக்குடி தொகுதியில் எப்போதும் எதிபார்ப்பு எழுவதுண்டு. அந்த வகையில் தற்போதும் யாருக்கு சீட்டு, யாருக்கு வேட்டு என்கிற கேள்வி இப்போது எழுந்து வருகிறது. 

Who carved in Kamal Hassan town ..? Who cares ..? Thermal flying AIADMK
Author
Tamil Nadu, First Published Feb 2, 2021, 12:55 PM IST

தென்மாவட்டங்களில் உள்ள சட்ட மன்றத் தொகுதிகளில் பரமக்குடி தொகுதியில் எப்போதும் எதிபார்ப்பு எழுவதுண்டு. அந்த வகையில் தற்போதும் யாருக்கு சீட்டு, யாருக்கு வேட்டு என்கிற கேள்வி இப்போது எழுந்து வருகிறது.

 Who carved in Kamal Hassan town ..? Who cares ..? Thermal flying AIADMK

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனின் சொந்த ஊர் பரமக்குடியில் ஆளும் கட்சியான அதிமுக, எதிர்க்கட்சியான திமுக மற்றும் டி.டி.வி தினகரனின் அமமுகவில் யார் யார் போட்டியிட வாய்ப்பு உள்ளது என்கிற ஆவலில் இருக்கிறார்கள் அந்த தொகுதி மக்கள். இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடி ரிசர்வ் தொகுதி. 1977ம் ஆண்டில் இருந்து 2019 வரை 11 முறை நடந்த தேர்தல்களில், 8 முறை அதிமுக வென்றுள்ளது.  ஆகவே இது அதிமுகவின் கோட்டையாக பார்க்கப்படுகிறது.

 199ல் மட்டுமே திமுக வென்றுள்ளது. 2001ல் தமாகவும், 2006ல் காங்கிரஸ் கட்சியும் வென்றுள்ளன. கடைசியாக 2011, 2016, 2019 ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்தலில் பரமக்குடியில் அதிமுகவே வென்றது. ஆகவே இங்கு மற்ற கட்சிகளை விட அதிமுக வேட்பாளராக யார் முன்னிருத்தப்படுகிறார் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. Who carved in Kamal Hassan town ..? Who cares ..? Thermal flying AIADMK

இந்த தொகுதியில் 2011ல் ஜெயலலிதா தலைமையில் ஆட்சி அமைந்த போது, அதிமுக சார்பில் மருத்துவரான எஸ்.சுந்தர்ராஜன் வெற்றி பெற்றார். அதன்பிறகு 2016ல் டாக்டர். சி.முத்தையா வெற்றி பெற்றார். ஆனால், முத்தையா 2017ல் டி.டி.வி.தினகரனுடன் சேர்ந்ததால் எம்.எல்.ஏ பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து 2019ல் இடைத்தேர்தல் நடந்தது. இடைத்தேர்தலில் தனக்கு சீட் கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த டாக்டர் சுந்தர் ராஜன் எதிர்பார்த்திருந்த நேரத்தில் சதன் பிரபாகர் வேட்பாளராக களமிறக்கப்பட்டார். அப்போது அதிமுக சார்பில் சதர்ன் பிரபாகர் வெற்றி பெற்றார். அமமுக சார்பில் போட்டியிட்ட முத்தையா மூன்றாவது இடத்தையே பிடித்தார். Who carved in Kamal Hassan town ..? Who cares ..? Thermal flying AIADMK

பரமக்குடியில் ஆளும் கட்சியான அதிமுக சார்பில் போட்டியிட கடும் போட்டி நிலவுகிறது. தற்போதைய சிட்டிங் எம்எல்ஏவாக உள்ள சதர்ன் பிரபாகரனுக்கும், 2011ல் வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சர் சுந்தர்ராஜனுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. முன்னிலையில் யார் முன்னாள் அமைச்சரான சுந்தர்ராஜன் அனைத்து சமூகத்தினரையும் அனுசரித்து செல்வார் என்றும் அவர் அமைச்சராக இருந்தபோது, பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்கு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி தந்துள்ளார் என்றும் தலைமைக்கு நெருக்கமானவர் என்றும் அவருக்கே அவருக்கே சீட் கிடைக்க அதிக வய்ப்பு உள்ளது என்றும் அவரது ஆதரவாளர்கள் நம்புகிறார்கள். கடந்த 2011-2016 இடையே ஜெயலலிதா அமைச்சரவையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்தவர் டாக்டர் சுந்தர்ராஜன். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த இவர், 1989-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஜெ.அணி சார்பில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமி, சுந்தர்ராஜன் ஆகியோரெல்லாம் ஒரே சீனியாரிட்டி உடையவர்கள்.

Who carved in Kamal Hassan town ..? Who cares ..? Thermal flying AIADMK

அதேநேரம் சதர்னின் ஆதரவாளர்களும், அவர் தொகுதிக்கு நிறைய செய்துள்ளார். அவருகே தலைமை சீட் தரும் என்றும் நம்புகிறார்கள். இதனிடையே திமுகவை பொறுத்தவரை,கடந்த முறை போட்டியிட்ட சம்பத்குமார் அல்லது சப்ரிஜிஸ்டர் பாலுக்கு வாய்ப்பு உள்ளதாக சொல்கிறார்கள். இருவருமே சீட் வாங்க கடுமையாக முயற்சி எடுத்து வருவதாக சொல்லப்படுகிறது. அமமுக சார்பில் டாக்டர் முத்தையா களம் இறங்குவார் என்று கூறப்படுகிறது. ஆனாலும் முன்னாள் அமைச்சரான டாக்டர் சுந்தரராஜன் அனைவரையும் அரவணைத்து செல்பவர் என்பதாலும், கட்சியில் சீனியர் என்கிற முறையிலும் அவருக்கே இந்த முறை வாய்ப்பு அதிகம் என்கிறார்கள் அதிமுக நிர்வாகிகள். அதிமுக வெற்றி உறுதியாகி பரமக்குடி வேட்பாளராக சுந்தர்ராஜன் மீண்டும் களமிறங்கி வெற்றி பெற்றால் மீண்டும் அமைச்சராகும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.  

 

Follow Us:
Download App:
  • android
  • ios