இந்தியாவில் மேலும் 2 கொரோனா தடுப்பூசிகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன  என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்  தகவல் தெரிவித்துள்ளார். 

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த 2021 - 2022ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் பல்வேறு புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதில், சுகாதாரத்துறைக்கான நிதி இந்த பட்ஜெட்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சுயசார்பு சுகாதாரத்திட்டத்திற்கு ரூ.64,180 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. 54.184 கோடி மதிப்பீட்டில் பிரதமரின் சுயசார்பு சுகாதாரத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

சுயசார்பு இந்தியா திட்டத்தை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்வதற்கான அம்சங்கள் இந்த பட்ஜெட்டில் உள்ளன. தற்காப்பு, குணப்படுத்துதல், சரியான சிகிச்சை அளித்த ஆகிய 3 விஷயங்களில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. 1.41 லட்சம் கோடியில் நகர்புற தூய்மை இந்தியா திட்டம் அறிமுகப்படுத்தப்படும். சுற்றுப்புற சூழல் பாதுகாப்பை உறுதி செய்ய பழைய வாகனங்களை திரும்ப பெறும் கொள்கை அறிமுகம். இந்தியாவில் உலக சுகாதார அமைப்பின் கிளை தொடங்கப்படும்.” எனத் தெரிவித்தார்.