நடவடிக்கை எடுக்கச் சொல்ல பாஜவினருக்கு எந்தவித தார்மீக உரிமையும்  இல்லை. எங்களுக்கு சட்டசபை தேர்தலில் வெற்றிகரமான தோல்விதான். வலுவான எதிர்க்கட்சியாக தான் இருக்கிறோம். 

முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் மீது நடவடிக்கை எடுங்கள் என்று பாஜக எங்களுக்கு கட்டளையிட முடியாது என்று முன்னாள் அமைச்சர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சென்னையில் இதுகுறித்து பேசிய அவர், ’’ஒரு கட்சியின் இன்டோர் மீட்டிங்க்கில் பல்வேறு கருத்துக்கள் விவாதத்திற்கு வரும். கட்சியினர் பல்வேறு கருத்துக்களை சொல்லலாம். சி.வி.சண்முகம் வெளிப்படையாக பேட்டி வைத்து அதிகாரப்பூர்வமாக சொன்னால் அதை கட்சியின் கருத்தாக எடுத்து கொள்ளலாம். அவர் மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லி எங்கள் கட்சிக்கு யாரும் டைரக்சன் கொடுக்க முடியாது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறுவதற்கு முதலில் இவர்கள் யார்? அவங்க வேலையை அவங்க பார்க்கட்டும். எங்க வேலையை நாங்க பார்க்கிறோம்.

நடவடிக்கை எடுக்கச் சொல்ல பாஜவினருக்கு எந்தவித தார்மீக உரிமையும் இல்லை. எங்களுக்கு சட்டசபை தேர்தலில் வெற்றிகரமான தோல்விதான். வலுவான எதிர்க்கட்சியாக தான் இருக்கிறோம். உள்ளாட்சித் தேர்தல் கூட்டணியில் வெளியே இருக்கும் சில கட்சிகள் உள்ளே வரலாம். உள்ளே இருக்கும் சில கட்சிகள் வெளியே போகலாம். அது குறித்து கட்சி முடிவு எடுக்கும். பாஜவின் கூட்டணி தொடருமா தொடராதா என்பதை ஒட்டுமொத்தக் கட்சியும் முடிவெடுக்கும்’’என அவர் தெரிவித்தார்.