Asianet News TamilAsianet News Tamil

யாரந்த 3 அதிர்ஷ்டசாலிகள்... ஸ்டாலினின் கடைக்கண் பார்வைக்காக காத்திருக்கும் நிர்வாகிகள்... லிஸ்டில் சபரீசனுமா.?

கம்பம் செல்வேந்திரன், சுப்புலட்சுமி ஜெகதீசன், பொங்கலுார் பழனிசாமி, கே.எஸ்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட, 25க்கும் மேற்பட்டவர்கள் மத்தியில், கடும் போட்டி உருவாகி உள்ளது. இளைஞர் அணி தரப்பில் இருந்து புதுக்கோட்டை அப்துல்லா, நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ., ராமசாமி மகன் முத்து, அண்ணாநகர் கார்த்திக் போன்றவர்கள், எம்.பி., பதவியை கைப்பற்ற தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
 

Who are the 3 lucky ones ... the executives who are waiting for Stalin's shoplifting ... is Sabarisan on the list?
Author
Tamil Nadu, First Published Aug 19, 2021, 2:48 PM IST

தமிழகத்திலிருந்து மூன்று ராஜ்யசபா உறுப்பினருக்கான பதவிகள் காலியாக உள்ள நிலையில் இந்த பதவிகளுக்கு தேர்தல் நடத்தினால் பெரும்பான்மையான எம்எல்ஏக்களை கொண்டுள்ள திமுகவே கைப்பற்றும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ராஜ்யசபா தேர்தல் அடுத்த மாதம் நடக்கும் வாய்ப்புள்ள நிலையில், தற்போது 3 தமிழ்நாடு எம்பிக்கள் இடம் காலியாக உள்ளது. திமுக சார்பாக எம்பி பதவியை பெற 300 முக்கியமான உறுப்பினர்கள் விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சபரீசன் செய்த உதவிக்கு கைமாறு செய்யும் விதமாக அவருக்கு ராஜ்யசபா எம்பி பதவியை வழங்க திட்டமிட்டுவருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.Who are the 3 lucky ones ... the executives who are waiting for Stalin's shoplifting ... is Sabarisan on the list?

இந்நிலையில் தங்க தமிழ்ச்செல்வன் அப்துல்லா மற்றும் சிவ சேனாபதி ஆகியோர் களுக்கிடையே ராஜ்யசபா பதவியை கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது. அதிமுகவின் சார்பாக ராஜ்யசபா எம்பியாக இருந்த முகம்மது ஜான் காலமானதாலும், மேலும் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதால் கேபி முனுசாமி மற்றும் வைத்திலிங்கம் ஆகியோர் தங்களது ராஜ்யசபா எம்பி பதவிகளை ராஜினாமா செய்ததாலும் 3 ராஜ்யசபா எம் பி பதவிகள் காலியாக உள்ளன. இதன் காரணமாக தற்போது மூன்று ராஜசபை உறுப்பினர்களுக்காக தேர்தல் நடைபெற உள்ளது.

3 ராஜ்யசபா எம்பிகளுக்கும் தனித்தனியாக தேர்தல் நடத்த வேண்டும் என திமுக தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டது. மேலும் வருகிற செப்டம்பர் 13ம் தேதி முதல் கட்டமாக தேர்தல் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அதிக எம்எல்ஏக்களை கொண்ட திமுகவுக்கு தான் அந்த பதவி கிடைக்கும் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.Who are the 3 lucky ones ... the executives who are waiting for Stalin's shoplifting ... is Sabarisan on the list?

இந்நிலையில் சட்டமன்ற தேர்தலில் முன்னாள் அமைச்சர்களை எதிர்கொண்டு தோல்வியுற்ற தங்கதமிழ்செல்வன் மற்றும் கார்த்திகேய சிவசேனாபதி ஆகிய இருவருக்கும் ராஜ்யசபா பதவி வழங்கப்படும் என்று பேச்சு அடிபட்டது. ஆனால் தற்போது முதற்கட்ட தேர்தலில் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலன் அணியின் மாநிலச் செயலாளர் புதுக்கோட்டையை சேர்ந்த எம்எம் அப்துல்லாவுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்றும் கூறப்படுவதாக தகவல் வெளியாகி வருகிறது.

தி.மு.க., மூத்த நிர்வாகிகளான கம்பம் செல்வேந்திரன், சுப்புலட்சுமி ஜெகதீசன், பொங்கலுார் பழனிசாமி, கே.எஸ்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட, 25க்கும் மேற்பட்டவர்கள் மத்தியில், கடும் போட்டி உருவாகி உள்ளது. இளைஞர் அணி தரப்பில் இருந்து புதுக்கோட்டை அப்துல்லா, நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ., ராமசாமி மகன் முத்து, அண்ணாநகர் கார்த்திக் போன்றவர்கள், எம்.பி., பதவியை கைப்பற்ற தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.Who are the 3 lucky ones ... the executives who are waiting for Stalin's shoplifting ... is Sabarisan on the list?

தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்., சார்பிலும், ஒரு எம்.பி., பதவி கேட்கப்படுகிறது. ஆனால், அக்கட்சிக்கு எம்.பி., பதவி வழங்க தி.மு.க., மேலிடம் விரும்பவில்லை. இதனால், மூன்று பதவிகளையும் தி.மு.க.,வே எடுத்துக்கொள்ளும் என தெரிகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios