120 பக்கங்கள் கொண்ட வெள்ளையறிக்கையில் கடன் விவரங்கள், வருவாய் இழப்புகளுக்கான காரணங்கள் உள்ளிட்டவை அதில் இடம்பெற உள்ளன. 

தமிழ்நாடு அரசின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை ஆகஸ்ட் 9ம் தேதி வெளியிடுகிறார் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

120 பக்கங்கள் கொண்ட வெள்ளையறிக்கையில் கடன் விவரங்கள், வருவாய் இழப்புகளுக்கான காரணங்கள் உள்ளிட்டவை அதில் இடம்பெற உள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் தமிழக அரசின் நிதிநிலை தொடர்பான நிலைமைகள் இதில் வெளியிடப்படும்.

வெள்ளை அறிக்கை என்ற பெயர் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது. வெள்ளை அறிக்கை என்பது ஒரு ஜனநாயக கருவி எனவும் அழைக்கப்படுகிறது. இந்த வெள்ளை அறிக்கையை அமைச்சரவையின் ஒப்புதல் இல்லாமல் வெளியிட முடியாது.

வெள்ளை அறிக்கை என்பது ஒரு குறிப்பிட்ட பொருள் பற்றியோ அல்லது பிரச்னைகள் பற்றியோ முழுமையாக தெரிவிக்கும் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ ஆவணமாகும். இந்த ஆவணத்தில் குறிப்பிட்ட சிக்கல் குறித்தோ அல்லது பொருள் குறித்தோ நிபுணரின் தீர்வும் பரிந்துரையும் கொண்டதாக இருக்கும். ஒரு சிக்கலை புரிந்து கொள்ளவோ, சிக்கலை தீர்க்கவோ, அல்லது முடிவெடுக்கவோ வெள்ளை அறிக்கை வழிவகை செய்கிறது. இந்த ஆவணத்தின் வெளிப்புற பக்கங்கள் வெள்ளை நிறத்தால் இருக்கும் என்பதால் இதற்கு வெள்ளை அறிக்கை என பெயர் வந்தது.