நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் ஆகியோர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்ற வகையில் அவர்கள் தமிழ் நாடு கணக்கில் சேர்க்கப்பட்டிருப்பதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தைச் சேர்ந்த இருவர் கேபினட் அமைச்சர்களாகியிருக்கிறார்கள் என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா ட்விட்டரில் பெருமைப்பட்டிருந்தார்.
பிரதமர் அமைச்சரவையில் உத்தரப்பிரதேசம் மாநிலத்துக்கு அதிக அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் ஆகியோருக்கு கேபினட் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக பாஜக தரப்பு கூறுகிறது.
நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக கூட்டணி அமைச்சரவை நேற்று மாலை பொறுப்பேற்றுக்கொண்டது. மோடி தமைலையிலான அரசில் 57 அமைச்சர்கள் பதவியேற்றுக்கொண்டார்கள். பாஜக அமோகமாக வென்ற மாநிலங்களுக்கு அமைச்சரவையில் முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது.

மோடி அமைச்சவையில் மிக அதிகமாக உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் இடம்பெற்றுள்ளார்கள். அந்த மாநிலத்திலிருந்து 9 பேர் அமைச்சர்கள் ஆகியுள்ளனர். இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளும் மகாராஷ்டிராவுக்கு 8 அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. மத்திய பிரதேசம், பீகாரிலிருந்து தலா 5 பேர் அமைச்சர்கள் ஆகியிருக்கிறார்கள். கர்நாடகாவிலிருந்து 4 பேரும் பேரும், குஜராத், ஹரியானா, ராஜஸ்தான் மாநிலங்களிலிருந்து தலா 3 பேரும் அமைச்சர்கள் ஆகியிருக்கிறார்கள்.

