மாநில அளவில் பணக்கார கட்சிகளில் பட்டியலில் அதிமுகவை  பின்னுக்குத்தள்ளி திமுக இரண்டாம் இடம் பிடித்துள்ளது. அதன் சொத்து மதிப்பு சுமார் 97 கோடியே 64  லட்ச ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது.

 

ஆண்டுதோறும் மாநில மற்றும் தேசிய அளவில் உள்ள அரசியல் கட்சிகளின் சொத்து மதிப்பு விவரத்தை ஜனநாயகத்துக்கான சீர்திருத்த சங்கம் என்ற அமைப்பு கணக்கிட்டு வெளியிட்டி வருகிறது. ஒவ்வொரு கட்சியும் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ள வரவு செலவு கணக்கு விவரங்களைத் திரட்டிஅந்த அமைப்பு இதை வெளியிட்டு வருகிறது. கடந்த  2017- 2018 ஆம் ஆண்டுகளுக்கு சுமார் 41 மாநில கட்சிகளில் சொத்துமதிப்பு விவரங்களை வெளியுட்டுள்ளது.  அதில் இடம் பெற்றுள்ள மொத்தம் மாநில கட்சிகளில் சொத்து மதிப்புத் தொகை சுமார் 320 கோடியே 6 லட்சம் ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது. 

இதில்  சுமார் 583  கோடியே 28 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்துவைத்துள்ளதன் மூலம்  தேசிய அளவில் பணக்கார கட்சிகளின் பட்டியலில் சமாஜ்வாடி கட்சி  முதலிடம் பெற்றுள்ளது. அதற்கு அடுத்தபடியாக 2017-18 ஆண்டு கணக்குப்படி சுமார் 191 கோடியே 64 லட்சம் ரூபாய் சொத்து வைத்துள்ளதன் மூலம்,  திமுக இரண்டாம் இடம் பிடித்துள்ளது.

 

இந்நிலையில் பணக்காரக் கட்சியின் பட்டியலில் அதிமுக மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.  அதிமுகவை பொருத்த வரை கடந்த 2017- 2018 ஆம் ஆண்டில் 189 கோடியே 54 லட்சம் ரூபாய் சொத்துக்கள் வைத்துள்ள கட்சி என கணக்கிடப்பட்டுள்ளது.  திமுகவின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டு கணக்கை பார்க்கிலும் 2017-2018  ஆம் ஆண்டு கணக்கில்  4.7 சதவீதம் அளவிற்கு  அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.