கட்சி தொடங்கப்போவது உறுதி என்றும், கட்சி தொடங்கும் தேதியை டிசம்பர் 31 அன்று தெரிவிப்பதாகவும் நடிகர் ரஜினிகாந்த் அறிவித்தார். அவருடைய கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக பாஜகவிலிருந்து வந்த அர்ஜூனமூர்த்தி, மேற்பார்வையாளராக தமிழருவி மணியன் ஆகியோரை அறிவித்தார். இந்நிலையில் போயஸ்கார்டனில் ரஜினியைச் சந்தித்து இருவரும் இன்று ஆலோசனை நடத்தினர். 
முதல்வர் வேட்பாளராக தான் இருக்கப்போவதில்லை என்று ரஜினி ஏற்கனவே தெரிவித்துள்ள நிலையில், அவரை முதல்வர் வேட்பாளராக இருக்கும்படி அவருடைய நலவிரும்பிகள் வலியுறுத்திவருகின்றனர். அதை அவர் ஏற்றுக்கொண்டால், ரஜினி எந்தத் தொகுதியில் போட்டியிடுவார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்நிலையில் இன்று தமிழருவி மணியனிடம் இதைப் பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த  தமிழருவி மணியன், “ரஜினிகாந்த் சட்டப்பேரவைத் தேர்தலில் தேர்தலில் போட்டியிடுவாரா?. அப்படி போட்டியிட்டால் எந்தத் தொகுதியில் போட்டியிடுவார் என்பதை அவர்தான் (ரஜினி) அறிவிப்பார்" என்று தெரிவித்தார்.