காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்றும், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடவேண்டும் என  வலியுறுத்தியும் தமிகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று  வருகிறது.

பொதுமக்கள்,மாணவர்கள்,பல கட்சி தொண்டர்கள் என பலரும்  போராட்ட களத்தில் இறங்கி உள்ளனர்.

இந்நிலையில் கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக தொடர்ந்து போராடி வரும் தூத்துக்குடி மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நடிகர் கமல் போராட்ட களத்திற்கு நேரடியாக சென்று,  அவரது ஆதரவை தெரிவித்து தெரிவித்தார்.

மாஸ்டர் அருண்குமார்

தூத்துக்குடி மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாகவும்,அவர்களை தொடர்ந்து ஊக்கப்படுத்தியும்,மத்திய அரசுக்கு எதிராக தொடர் போராட்ட முழக்கங்களை எழுப்பி வருகிறார் இந்த அருண் குமார் .

இந்த சிறு வயதில் இப்படி ஒரு போராட்ட மனம் கொண்டவரா  அருண்குமார் என பலரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.