இந்திய பிரதமர் மோடியும் , நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனும் மக்களின் துன்பத்தில் பங்கெடுக்காமல் வங்கிகளின் கஜானாவை மீண்டும் நிரப்பவே பாடுபடுகிறார்கள்.வங்கிகள் இஎம்ஐ வசூல் நடவடிக்கையில் ஈடுப்பட்டால் தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் தற்கொலைகள் நடக்க வாய்ப்பு இருக்கிறது.இதையெல்லாம் மனதில் கொண்டு பிரதமர் மோடி ஒருவருட காலத்திற்கு இஎம்ஐக்களை ரத்து செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடிக்கும் நிதியமைச்சர் நிர்மலாசீத்தாராமனுக்கும் இமெயில் மூலம் கடிதம் அனுப்பியிருக்கிறார் மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி திமுக எம்எல்ஏ. டாக்டர்.சரவணன்.

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை தலைகீழாக மாற்றியிருக்கிறது. ஒவ்வொரு நாடும் பொருளாதார பின்னடைவால் பாதிக்கப்பட்டு அங்குள்ள மக்கள் தங்களுடைய தனிநபர் வருமானத்தை இழந்தும் சம்பளத்தை பாதியாகவும் பெற்று வருகின்றனர். இதனால் வேலைவாய்ப்பு பாதிக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கை எடுத்துள்ளது. மத்திய மாநில அரசுகள் அரசுஊழியர்களுக்கும் பாதிப்பு என அடித்தட்டு மக்கள் முதல் அரசாங்கம் வரைக்கும் பொருளாதார பாதிப்புகள் இருக்கின்றது.இதற்கிடையில் தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கு கட்டணம் கட்டச்சொல்லி கட்டாயப்படுத்தி வருகிறார்கள். வருமானம் குடும்பம் நடத்தவே பற்றாக்குறையாக இருக்கும் போதுஇதுபோன்ற நெருக்கடியால் இன்னொரு பக்கம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை அரசு புரிந்து கொள்ள வேண்டும். பள்ளிக்கட்டணங்களை இந்த கல்வியாண்டு மத்திய மாநில அரசுகள் ரத்து செய்ய வேண்டும்.

கடந்த மார்ச்24ம் தேதி பொதுமுடக்கத்தை அறிவித்தது மத்திய மாநில அரசுகள். கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கின்றது. ஏழை எளிய மக்கள் நடுத்தர மக்கள் வங்கிகளில் வாங்கிய கடன் வீட்டுக்கடன், கடன் அட்டை மூலம் பெறப்பட்ட கடன் என அனைத்துக்கடன்களையும் மாத தவனைகள் மூலம் கட்ட முடியாமல் தவித்து வருகின்றனர். ஏற்கனவே மத்திய ரிசர்வ் வங்கி 6மாதம் இஎம்ஐ காலத் தவணையை தள்ளி வைத்தது.1வருசத்துக்கு அனைத்துக்கடன்களையும் ரத்துசெய்து அதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுக்க வேண்டும்.
வங்கிகள், 'இதற்கு மேல் இஎம்ஐ மாததவணைகள் கட்ட காலநீட்டிப்பு செய்தால் பாதிக்கப்படுவதாக சொல்லப்படுவது பொய். உண்மையிலேயே நடுத்தர மக்கள் எவ்வளவு பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை மத்திய மாநில அரசுகள் புரிந்துகொள்ள வேண்டும்.மேலும் மக்கள் நலன் சார்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மக்களிடம்இருந்து லாபம் பார்த்து சேமித்து வைத்துள்ள வங்கிகளால் தாக்கு பிடிக்க முடியவில்லை என்று சொன்னவுடன் அவர்களுக்கு சாதகமாக நடவடிக்கை எடுக்க துடியாய் துடிக்கும் மத்திய அரசு.., மக்கள் பொருளாதாரத்தில் வீழ்ந்துள்ள போது அவர்களுக்காக வரிந்துகட்டாதது ஏன்? முதலாளித்துவ அரசாக மத்திய அரசு மாறிவிட்டது. அமெரிக்கா போன்ற நாடுகள் வங்கி கடன். வீட்டுகடன் விசயத்தில் ஒருவருடத்திற்கு இஎம்ஐ கட்ட காலஅவகாசம் வழங்கியிருக்கிறது.

 


தமிழகத்தில் நெசவாளர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள், சிறு குறு விவசாயிகள், சிறுவியாபாரிகள், நடுத்தர மக்கள் இந்த கொரோனா தொற்றால் பொருளாதாரத்தில் சிக்கி சின்னாபின்னமாகியிருக்கிறார்கள். அவர்களின் துன்பத்தில் கைகொடுப்பதுதான் மத்திய அரசிற்கு சரியானதாக இருக்கும். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அறிவித்த 20லட்சம் கோடி திட்டத்தில் ஏழைய எளிய, நடுத்தர மக்கள் வாங்கிய வங்கி கடன்கள் முழுவதையும் ரத்து செய்ய வேண்டும்.

"மக்கள் பணம் மக்களுக்கே" என்கிற வகையில் நொந்துபோயி இருக்கும் மக்கள் வயிற்றி மேலும் எண்ணெய் ஊற்றி எறிய வைக்க வேண்டாம் மத்திய அரசு. தேர்தல் நேரத்தில்.."கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் 15லட்சம் ரூபாய் வரவு வைக்கப்படும் என்று சொன்ன மோடி இந்த நேரத்தில் என் தொகுதி மக்களுக்கும், தமிழக மக்களுக்கும் அந்த பணத்தை வழங்கினால் கூட போதும். தேசிய பேரிடர் காலத்தில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில் நீங்கள் அந்த பணத்தைவழங்கி விட்டு இஎம்ஐ வசூல் செய்யுங்கள். எனவே மக்களின் துன்பத்தில் பங்கெடுத்துக்கொள்ளுங்கள். வங்கிகளின் கஜானாவை நிரப்ப பாடுபடாதீர்கள். அது உங்கள் அரசியல் எதிர்காலத்துக்கு மக்கள் எதிராக திரும்புவார்கள். தமிழகத்தில் தற்போது பொதுமுடக்கம் நீக்கப்பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருக்கிறார்.இந்தநிலையில் மக்கள் மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப இன்னும் 6மாதம் காலம் பிடிக்கும் என்பதை மீண்டும் பிரதமருக்கும், நிதியமைச்சருக்கும் நினைவுபடுத்த விரும்புகிறேன். மீண்டும் மீண்டும் மக்களை ஏமாற்ற வேண்டாம். அனைத்துக்கடன்களையும் ரத்து செய்யவதே நீங்கள் மக்களுக்கு செய்யும் புண்ணியம்.