சுயமரியாதைத் திருமணம் செய்துகொண்டதை அடுத்து கடத்தப்பட்ட இளமதியின் நிலை தற்போதுவரை என்னவென்று தெரியவில்லை. காவல்துறையினரும் தேடுதல் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில், #இளமதி_எங்கே? என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது.

சேலம் மாவட்டம் கொளத்தூரில், கடந்த 9ஆம் தேதி, செல்வன், இளமதி என்ற காதல் ஜோடியினர் சாதி மறுப்பு சுயமரியாதைத் திருமணம் செய்துகொண்டனர். அந்த காதல் ஜோடிகளையும், திருமணத்தை நடத்திவைத்த திராவிடர் விடுதலைக் கழகத்தினரையும் கும்பல் ஒன்று கடுமையாகத் தாக்கியதோடு, பெண்ணையும் கடத்திச்சென்றது.

இச்சம்பவம் தமிழகத்தில் பெரும் பதற்றத்தை உருவாக்கி இருக்கும் நிலையில், 4 நாட்கள் கடந்தும் இன்னும் அந்தப் பெண் மீட்கப்படவில்லை. தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் நேற்று நாடாளுமன்றத்தில் இதுகுறித்து பேசினார். அப்போது சுயமரியாதை திருமணத்தை இந்தியவிற்கே அறிமுகம் செய்த இயக்கம் திமுக. சுயமரியாதை திருமணம் செய்த மணமக்களை கடத்தி சென்ற சமூகவிரோத கும்பல் மீது நடவடிக்கை எடுத்து அவர்களை பத்திரமாக மீட்க வேண்டும் என அவர் கூறினார். இந்நிலையில், இளமதி எங்கே? என்ற ஹாஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.