சரணடைந்தார் சசிகலா ......
சசிகலா இளவரசி சுதாகரன் உள்ளிட்ட 3 பேருக்கும் சொத்து குவிப்பு வழக்கில், தண்டனை பிறப்பித்தது உச்சநீதிமன்றம் . இதனை தொடர்ந்து பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜராக சசிகலா கார்டனில் இருந்து புறப்பட்டார்.
இந்நிலையில் இன்று காலை சுமார் 1௦.3௦ மணிக்கு, போயஸ் கார்டனிலிருந்து, புறப்பட்ட சசிகலாவுடன் அவரது அண்ணி இளவரசியும் பெங்களூரு நீதிமன்றத்திற்கு சென்று சரணடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.ஆனால் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட மூன்றாவது நபரான சுதாகரன் சரணடைய வில்லை என்பது குறிப்பிடத்தக்கது .
பெங்களூரு நீதிமன்ற நீதிபதி அஸ்வத் நாராயணா, முன்பு சசிகலா மற்றும் இளவரசி சரணடைந்தனர்.
சுதாகரன் எங்கே ?
இந்நிலையில், சுதாகரன் சரணடைய கால அவகாசம் கோரி, அவர் தரப்பில் இருந்து மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உடல் நிலை சரியில்லை என காரணம் காட்டி ,மனு தாக்கல் செய்துள்ளார் சுதாகரன் .இந்நிலையில் நாளை சரணடைவார் என தகவல் தெரிவிக்கின்றன
மேலும் பெங்களூருக்கு சென்ற சசிகலாவின் கார் மற்றும் தமிழக பதிவெண் கொண்ட 5 கார் மீது மர்ம நபர்கள்த சிலர் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து அங்கு குவிந்திருந்த போலீசார் பொதுமக்கள் மீது தடியடி நடத்தினர். மேலும் தமிழ்நாடு பதிவு எண் கொண்ட கார்கள் விரட்டியடிக்கப்பட்டது.
நீதிமன்றத்தின் முன்பாகவே இவ்வாறு நடைப்பெறுவதால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது .
