இதுவரை அரசியல் கட்சி தொடங்கியவர்கள் எல்லாம் செண்டிமென்டாக மதுரையில் தான் கட்சி தொடங்கியதும் முதல் மாநாடு நாடத்தியதும் வரலாறாக உள்ளது. தெற்கே இருந்து கட்சி தொடங்கினால் அந்த கட்சி பலம் பெறும் என்பதற்கு இன்றைக்கு தமிழகத்தில் தலைதூக்கி இருக்கும் கட்சிகளே சாட்சி.  ரஜினிகாந்த் கட்சி தொடங்குவாரா மாட்டாரா? என்று பேசப்பட்டு வந்தது போக, மதுரையில் முதல் மாநாடு நடத்துவதற்கான ஏற்பாடுகளை அவர் செய்துவருவதாக இப்போது பேச ஆரம்பித்து விட்டார்கள். ரஜினியும் அதற்கான வேலைகளில்தான் மும்முரமாக இருப்பதாகவே தெரிகிறது.

விஜயகாந்த், சரத்குமார், சீமான், கமல்ஹாசன் உள்ள பலரும் தாங்கள் கட்சி துவங்கியபோது மதுரையில்தான் முதல் மாநாடு நடத்தினார்கள். அதே போல் ரஜினியும் மதுரையில்தான் முதல் மாநாடு நடத்தவிருக்கிறார் என்று அவரது மன்றத்தில் கூறி வருகிறார்கள். ஆனால், கட்சி தொடங்கியதும் மதுரையில்தான் முதல் மாநாடு நடத்த வேண்டும் என்கிற ரஜினியின் திட்டத்திற்கு காரணம் என்கிறார்கள்.

ரஜினி மதுரையை தேர்ந்தெடுத்ததற்கு காரணம் முத்துமணி. ரஜினிக்கு முதன் முதலாக ரசிகர் மன்ற ஆரம்பித்தவர்தான் முத்துமணி. ரஜினி வளர்ந்து வரும் நடிகராக இருந்தபோதே அவருக்கு மதுரையில் மன்றம் அமைத்தவர் முத்துமணி. அதனால் அவர் மீது ரஜினிக்கு தனிப்பாசம். மன்ற கூட்டங்களில் முத்துமணியின் பெயரைச்சொல்லி அழைத்து பேசுவாராம் ரஜினி.முத்துமணியின் திருமணத்தை ரஜினி தனது பூஜை அறையில் வைத்து தாலி எடுத்துக்கொடுத்து அவர்களுக்கு தேவையான சீர்வரிசைகளை கொடுத்து அனுப்பினார்.இதுவரைக்கும் ரஜினி எந்த ரசிகனுக்கும் தனது பூஜை அறையில் வைத்து திருமணம் செய்து வைத்த சரித்திரம் கிடையாது. அந்த சரித்திரம் முத்துமணிக்கு உண்டு.

மதுரையில் இருக்கும் ரஜினிமன்ற நிர்வாகிகள் அனைவரும் முத்துமணியின் கீழ் இருந்தவர்கள். முத்துமணி குடிக்கு அடிமையாகிவிட்டதால் அவரை ஏறி மாவட்ட பொறுப்புகளுக்கு வந்துவிட்டார்கள். அந்த தீவிர ரசிகர் முத்துமணி, நுரையீரல் பிரச்சனையினால் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தகவல் அறிந்த ரஜினி, ’’ சீக்கிரம் குணமாகி வந்துடுவீங்க. குணமாகி வந்ததும் என்னை வந்து பாருங்க’’என்று ஆறுதல் கூறி அனுப்பிய ஆடியோ வாய்ஸ் வைரலானது.

கட்சி தொடங்கியதும் முதல் மாநாட்டை மதுரையில் நடத்த வேண்டும் என்பதையும், முதல் ரசிகன் முத்துமணியை அம்மேடையில் அமரவைத்து கவுரவப்படுத்த வேண்டும் என்பதும் ரஜினியின் எண்ணம் என்கிறார்கள் ரஜினி ரசிகர்கள்.