சொத்து பங்கீட்டில் ஆண்களுக்கு நிகரான உரிமை பெண்களுக்கும் உள்ளது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ள திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கருணாநிதிக்கு புகழாரம் சூட்டியுள்ளார். 

1929ல பெரியார் செங்கல்பட்டுமாநாட்டில் பெண்களுக்கு சொத்தில் சமஉரிமை வேண்டும் என தீர்மானம் ஏற்றினார். 1951ல் நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு சொத்துரிமை தீர்மானத்தை அம்பேத்கர் கொண்டு வந்தபோது அது தோற்கடிக்கப்பட்டது. 1989ல் கலைஞர் சட்டமாக்கினார். 2005ல் மத்தியில் சட்டத்திருத்தம் வந்தது. இந்நிலையில் சொத்து பங்கீட்டில் ஆண்களுக்கு நிகரான உரிமை பெண்களுக்கும் உள்ளது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின், ‘’பெண்களுக்கு சொத்தில் சமஉரிமை உண்டென முத்தமிழறிஞர் கலைஞர் 30 ஆண்டுகளுக்குமுன் தமிழகத்தில் சட்டம் இயற்றினார். அதை நாடெங்கும் உறுதிப்படுத்தும் மகத்தான தீர்ப்பினை வழங்கியுள்ளது உச்சநீதிமன்றம். சமூக சீர்திருத்தங்களை முன்னெடுக்கும் முன்னோடி இயக்கம் திமுக என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது’’எனத் தெரிவித்துள்ளார்.