ராமதாஸ் முன்பு சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றாமலும், செயல்பாடுகளில் பின்வாங்கி வருவதாகவும் கூறி தி.மு.க.,வின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி விமர்சித்து வருகிறது. 

மறந்து போச்சா மருத்துவரே என்கிற தலைப்பில் தினந்தோறும் ராமதாஸை விமர்சித்து வருகிறது. தொடர்ந்து 9வது நாளான இன்று அந்தப்பகுதியில், ‘’1987 தொடர் சாலை மறியலில் உயிரிழந்த இருபத்தைந்து குடும்பங்களுக்கு தலா பத்து கறவை மாடுகள் வாங்கித் தருவேன் என்று சத்தியம் செய்தீர்களே  அந்த சத்தியம் இன்றுவரை நிறைவேற்றப்படாமல் இருக்கிறதே... நீங்கள் சொன்னது மறந்து போச்சா மருத்துவரே..?

 

இறந்துபோன இருபத்தைந்து பேர் நினைவாக மணிமண்டபம் கட்டித்தருவேன்  என்றீர்களே மறந்து போச்சா மருத்துவரே? என முரசொலி நாளிதழ் கேள்வி மேல் கேள்வி எழுப்பியுள்ளது.