when will sasikala resume her vratham ttv dinakaran told press about his first day experiene
திங்கள்கிழமை இன்று சட்டசபையில் தனது கன்னிப்பேச்சை முடித்துக் கொண்டு வெளியே காரில் சென்ற தினகரனை தனியார் தொலைக்காட்சி ஒன்று பேட்டி கண்டது. அப்போது பேசிய தினகரன், பெங்களூரு சிறையில் மௌனவிரதத்தில் இருக்கும் சசிகலா என்று தனது விரதத்தைக் கலைக்கிறார் என்பதையும் கூறினார்.
சட்டசபை கூட்டம் முடிந்து, காரில் ஏறிச் சென்ற தினகரனிடம், ஸ்லீப்பர் செல் குறித்துக் கேட்டபோது, ஸ்லீப்பர் செல்லுக்கு இன்ஸ்ட்ரக்ஷன் கொடுத்திருக்கோம். என்றைக்கு ஓட்டெடுப்பு வருகிறதோ அப்போது வெளியில் வருவார்கள் என்று மீண்டும் திகிலூட்டிய தினகரன், நம்பிக்கை வாக்கெடுப்பு வந்தால் அப்போது பார்ப்போம். எங்க எம்.எல்.ஏ.க்கள் தீர்ப்பு வந்ததும் நிச்சயம் வாக்கெடுப்பு நடக்கும், அப்போது பார்த்துக் கொள்வோம்... என்று கூறிய தினகரன், இந்த அரசைக் காப்பாத்தணும்னா அது எடப்பாடி, பன்னீர்செல்வம் கையில் தான் இருக்கிறது. அவர்கள்தான் தங்கள் தவறை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று கூறினார்.
எடப்பாடி, பன்னீர்செல்வம் இருவரும் தாங்கள் யார் பேச்சைக் கேட்டு நடக்கிறோம் என்று அவர்கள் உணரவேண்டும் என்று கூறிய தினகரன், அம்மா உருவாக்கிய ஆட்சி, சின்னம்மா தியாகத்தில் உருவாக்கிய ஆட்சி தொடர வேண்டும் என்றால் எடப்பாடி என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்க வேண்டும் என்று கூறினார் தினகரன்.
தாங்கள் இருவரும் சுயநலத்தை விட்டுவிட்டு தமிழ்நாட்டு மக்கள் நலத்தையும் கட்சியினர் நலனையும், ஒன்றரை கோடி தொண்டர்களின் நலத்தையும் பார்க்கவேண்டும் என்று கூறிய தினகர்ன, அவர்கள் இருவரும் மனசு விட்டு எது சரியோ அதை செய்யுங்க என்று கூறுவதாகத் தெரிவித்தார்.
எடப்பாடி, பன்னீர்செல்வம் இருவரும் மனம் திருந்தி திரும்ப வந்தால், அவர்களை சேர்த்துக் கொள்வீர்களா என்று கேள்வி எழுப்பினார் செய்தியாளர். அதற்கு தினகரன், தவறு செய்தவர்கள் திருத்தமாட்டார்கள்; அறுபது அறுபத்தைந்து வயதில் தவறு செய்தவர்கள் திருந்த மாட்டார்கள், இருவரும் சீனியர் சிட்டிசன்கள். அவர்கள் குறித்து, தொண்டர்கள் முடிவு செய்ய வேண்டும், பொதுச் செயலாளர் சின்னம்மா முடிவு செய்யவேண்டும் என்று கூறிய தினகரன், சின்னம்மா என்று தனது மௌன விரதத்தை முடிக்கிறார் என்பதையும் சொல்லிவிட்டுச் சென்றார்.
வரும் ஜனவரி 31 ஆம் தேதி வரைக்கும் சின்னம்மா மௌன விரதத்தில் இருப்பார் என்று கூறி நகர்ந்தார் டிடிவி தினகரன்.
