பள்ளிகள் திறப்பது குறித்து இதுவரை அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல் தெரிவித்துள்ளார்.

கோபிசெட்டிபாளையத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான பிறகே பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசனை நடத்தப்படும். சூழ்நிலை மற்றும் பெற்றோர்கள் மனநிலைக்கு ஏற்ப முடிவு எடுக்கப்படும். மாணவர்களின் நலன் கருதி கல்வி ஆலோசகர்கள் கருத்தை கேட்டு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முடிவெடுப்பார் என்றார்.

அதே சமயம் மாணவர்களின் சுமையை குறைக்கும் வகையில், பள்ளிப் பாடங்களைக் குறைப்பது குறித்து 16 பேர் கொண்ட உயர்நிலைக் கழு ஆய்வு செய்து வருகிறது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும். அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மாணவர்கள் தேர்வை எதிர்நோக்கி ஆர்வமாக இருக்கிறார்கள் என்றும் அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.