ஆட்சிக்கு வருவதற்கு முன்பே திமுகவினர் மிரட்டத்தொடங்கி விட்டதாக பலரும் கவலை கொள்கின்றனர். அந்த வகையில் திமுக எம்.பி., செந்தில் குமார் பகிரங்கமாக தொடர்ந்து மிரட்டி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

 

நமது அம்மா நாளிதழில் ஒரு கட்டுரை வெளியானதை சுட்டிக்காட்டி, திமுக எம்.பி., செந்தில் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், ’’பெருசா ஒண்ணும் இல்ல, ஒரு ஐந்தே ஐந்து பௌர்ணமி மட்டும் தான். அதற்கு பின் அம்மா-வாசைகளுக்கு சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு மிக சிறப்பாக செய்துவிடலாம்’’ எனப்பதிவிட்டு இருந்தார்.  அடுத்து காவல்துறை அதிகாரிகளை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மிரட்டும்  தொனியில் பேசி இருந்தார். 

இந்நிலையில், திமுகவின் தில்லாலங்கடிகளை வீடியோ போட்டு வெட்டவெளிச்சமாக்கி வந்த அரசியல் விமர்சகர் மாரிதாஸை திமுக எம்.பி., செந்தில் குமார் மிரட்டியதாக தகவல்கள் கசிந்தன. அதனை மையப்படுத்தி, அரசியல் விமர்சகரான கிஷோர் கே.சாமி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘’தருமபுரி செந்தில்குமார் எம்.பி., மாரிதாசரை மிரட்டுறீங்களாமே, அவரைவிட, கேவலமாக உங்கள் தலைமையை விமர்சித்து விட்டு வருகிறேன். அவராவது சூப்பர் ஸ்டார் முடிவால் சோர்வானார். எனக்கு அதெல்லாம் இல்லை. முடிந்ததை பாருங்கள்’ எனப்பதிவிட்டு இருந்தார்.

 

அந்தப்பதிவிற்கு மிரட்டல் தொனியில் பதிலளித்துள்ளார் செந்தில் குமார் எம்.பி., இது குறித்து அவர் தனது ட்விட்டர், ‘’இவ்வளவு நாள் பொறுமை காத்திருக்கிறார்கள். இன்னும் கொஞ்சம் நாள்தான். சட்டப்படி எடுக்கும் நடவடிக்கையில், சிறப்பு முதல் மரியாதை உங்களுக்கு தான். அதில், எந்த சந்தேகமும் வேண்டாம். பெயர் ஏன் குறிப்பிட்டு சொல்லவில்லை என சிலர் பேர் சொல்லக்கூட தகுதியில்லாதவர்கள். அந்த தகுதியில்லாத லிஸ்டில் நீங்கள் தான் நம்பர் -1. ’’என மிரட்டி உள்ளார்.

 

இதற்கு பதிலடி கொடுத்துள்ள சிலர், ‘’எந்த திமுக, காங்கிரஸ்காரர்களாவது நாங்கள் ஆட்சிக்கு வந்து மக்களுக்கு நல்லது பண்ணுவோம் என சொல்கிறார்களா? 5 மாதத்தில் ஆட்சிக்கு வந்து DGPயை பாத்துக்கறோம், அண்ணாமலைக்கு இருக்கு, வெட்டுறோம், தூக்குறோம் என்றுதான் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்.
 


ஆட்சியில் இல்லாமல் வெறி கொண்டு இருக்கிறார்கள்’’என்றும், ஆட்சிக்கு வருவதற்கு முன்பே பொது வெளியில் உங்களுக்கு பிடிக்காதவர்களையும், விமர்சிப்பவர்களையும் மிரட்ட தொடங்கி விட்டீர்கள். நீங்கள் ஆட்சிக்கு வந்தால் மக்கள் நிலைமை அதோ கதி தான், இதில் நாடளுமன்ற உறுப்பினர் வேறு’’என்றும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.