இந்திய தரப்பு சர்வதேச வழக்கறிஞரான ஹரிஷ் சால்வி அவர்களை தொடர்பு கொண்டு சுஷ்மா சுவராஜ் ஒரு விஷயத்தை அவர் இறக்கும் நேரத்திற்கு பத்து நிமிடங்களுக்கு முன் தெரிவித்து உள்ளார்.

இப்படி ஒரு நிகழ்வை குறிப்பிட்டு மிகவும் வருத்தமடைந்துள்ளார் வழக்கறிஞர் ஹரிஷ் சால்வி. திடீர் மாரடைப்பு காரணமாக நேற்று இரவு சுஷ்மா சுவராஜ் காலமானார். இவர் இறப்பதற்கு பத்து நிமிடங்களுக்கு முன்பாக இந்திய தரப்பு வழக்கறிஞரான ஹரிஷுக்கு கால் செய்து, உங்களது ஒரு ரூபாய் கட்டணத்தை நேரில் வந்து பெற்றுக்கொள்ளுங்கள் என தெரிவித்து உள்ளார். 

அதாவது இந்தியாவுக்காக உளவு பார்த்து, பாகிஸ்தான் ராணுவத்தால் கைது செய்யப்பட்டவர் தான் குல்பூஷண் யாதவ், இவரை மீட்க சர்வதேச கோர்ட்டில் இந்தியா போராடி வருகிறது. இந்த வழக்கில் வாதாடி வருபவர்தான் ஹரிஷ் சால்வி. இந்தியாவிற்காக வாதாடி வரும் ஹரிஷ் சால்வி, பெயருக்கென, ரூபாய் 1 கட்டணமாக பெற்றுக் கொள்கிறார். இதனை பெற்றுக் கொள்ள நாளை மாலை ஆறு மணிக்கு வாருங்கள் என நேற்று தெரிவித்துள்ளார் சுஷ்மா. அதன் பிறகு பத்து நிமிடத்திலேயே மாரடைப்பு ஏற்பட்டு இறந்துள்ளார். இது குறித்து வருத்தம் அடைந்து தெரிவித்துள்ள ஹரிஷ்

"நான் நேற்று 8.50 மணிக்கு சுஷ்மாவிடம் பேசினேன். அது ஒரு உணர்ச்சி பூர்வமான நிகழ்வு.. இந்த வழக்கில் நீங்கள் வெற்றி பெற்றதற்காக உங்களுக்கு தர வேண்டிய கட்டணம் ரூபாய் ஒன்றை,இன்று மாலை 6 மணிக்கு நேரில் வந்து பெற்றுக் கொள்ளுங்கள் என என்னிடம் தெரிவித்து இருந்தார்" என மிகவும் வருத்தப்பட்ட தெரிவித்துள்ளார்.

குல்பூஷன் விஷயத்தைப் பொருத்தவரையில் அவருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பாகிஸ்தானுக்கு சர்வதேச கோர்ட் உத்தரவிட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத்தான் முதல் வெற்றி என சுஷ்மா சுவராஜ் தெரிவித்து ஹரிஷுக்கு கால் செய்து நேரில் வந்து ரூ.1 கட்டணத்தை பெற்றுக்கொள்ளுங்கள் என தெரிவித்து இருந்தார்.