தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 1, 6, 9ம் வகுப்புகளுக்கு ஆகஸ்ட் 17 முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- 2020-21-ம் ஆண்டு கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை வரும் 17ம் தேதி தொடங்கும். 1,6,9ம் வகுப்புகளுக்கான சேர்க்கை ஆகஸ்ட் 17ம் தேதி முதல் தொடங்கும். அதேபோல், 11ம் வகுப்புக்கான சேர்க்கை வரும் 24ம் தேதி தொடங்கும். தனிமனித இடைவெளியை பின்பற்றி மாணவர் சேர்க்கை நடைபெறும். மாணவர் சேர்க்கை அன்றே பாடப்புத்தகங்கள் வழங்கப்படும். 

பிற பள்ளிகளுக்கு மாறும் மாணவர்களுக்கும் அக்டோபர் 17ம் தேதி முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும். மேலும், பேசிய அவர் தனியார் பள்ளிகளில் எல்கேஜி, யூகேஜி மாணவர் சேர்க்கை இணையம் வழியே நடைபெறும். 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் எந்த குழப்பமும் இல்லை. காலாண்டு, அரையாண்டு தேர்வுகளை எழுதிய அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். பள்ளிக்கு முழுவதுமாக வராத மாணவர்களுக்கு மட்டுமே தேர்ச்சி முடிவுகள் இல்லை. 

பள்ளிகள் திறக்க தற்போது சாத்தியக்கூறு இல்லை. கொரோனா தாக்கம் குறைந்த பிறகே பள்ளி திறப்பு குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.