Asianet News TamilAsianet News Tamil

#BREAKING தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது?... அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு...!

தமிழகத்தில் உச்சம் தொட்டு வந்த கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாகவே கணிசமாக குறைய ஆரம்பித்துள்ளது.

when schools are open TN government official announcement
Author
Chennai, First Published Jun 1, 2021, 11:30 AM IST

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பள்ளி - கல்லூரிகள் மூடப்பட்டன. கொரோனா சற்று குறைய தொடங்கியதை அடுத்து 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்கப்பட்டு பாடம் நடத்தப்பட்டு வந்தது. சிறிது நாட்களிலேயே மாணவர்களும், ஆசிரியர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டதையடுத்து மறுபடியும் பள்ளிகள் மூடப்பட்டன.

when schools are open TN government official announcement

கடந்த மார்ச் 22ம் தேதி முதல் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் நடைபெற்று வந்த நிலையில், சிறிது நாட்களிலேயே கொரோனா பரவல் காரணமாக அவர்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. பொதுத்தேர்வும் தள்ளி வைக்கப்பட்டு, வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலமாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த 2020ம் ஆண்டு முதலே பிள்ளைகள் பள்ளிக்குச் செல்ல முடியாததால் பெற்றோர்கள் கவலை அடைந்துள்ளனர். 

when schools are open TN government official announcement

தமிழகத்தில் உச்சம் தொட்டு வந்த கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாகவே கணிசமாக குறைய ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் அனைத்து பள்ளிகளுக்கும்  தொடக்க கல்வி இயக்குநர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார் . தளர்வில்லா ஊரடங்கு முடிவுற்ற பிறகு பள்ளிகள் திறப்பது குறித்து அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார். மாணவர்களுக்கான விலையில்லா பாடப்புத்தகங்கள் உள்ளிட்ட நலத்திட்டங்கள் வழங்குவது குறித்தும் பள்ளிகல் திறந்த பின்னர் தெரிவிக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios