*கமலின் திரை உலக பயணம் 60 ஆண்டுகளைக் கடந்தும் செல்கிறது என்பது பிரமிக்கத்தக்க விஷயம். ஆனால் இதை விமரிசையாக கொண்டாட அவர் விரும்பவில்லை. நவம்பர் 7-ம் தேதி அவரது பிறந்தநாள் வருகிறது. அதேநாள் தான் அவரது தந்தை இறந்த தினம். அன்று கமலின் சொந்த ஊரான பரமக்குடியில் தன் தந்தையின் சிலையை திறக்க முடிவு செய்துள்ளார். 
-முரளி அபாஸ் (ம.நீ.ம. மாநில செயலாளர்)

*ஆண்களுக்கும், திருநங்கையருக்குமான திருமணம் என்பது உடல் ரீதியான தேவை என்பதை தாண்டிய பிணைப்பாகத்தான் இருக்கிறது. இதுவரையில் திருநங்கையை திருமணம் செய்துவிட்டு வெளியே தெரியாமல் வாழ்ந்தவர்கள் கூட, ‘இதில் தவறு ஒன்றும் இல்லை?’ என்று இப்போது தைரியமாக வெளியே வர துவங்கியுள்ளனர். 
- பிரியா பாபு (திருநங்கைகள் பற்றிய ஆய்வாளர்)

*தமிழகத்தில் கூடுதலாக மருத்துவ கல்லூரிகள் துவங்க வேண்டும் என பிரதமர் மோடியை சந்தித்து கோரினேன். அதற்கான முன் மொழிவுகளை அனுப்பி வைத்தேன். இப்போது என் கோரிக்கையை ஏற்று, ஆறு மருத்துவ கல்லூரிகளுக்கு மத்திய அரசு அனுமதி தந்துள்ளது. இதற்காக பிரதமருக்கு நன்றி. -எடப்பாடி பழனிசாமி (தமிழக முதல்வர்)

*காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக எழுந்துள்ள கோபத்தை மறைக்கவே முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தை கைது செய்துள்ளது மத்திய அரசு. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டுள்ள நிலையில், காஷ்மீர் விவகாரத்தை நன்று அறிந்த சிதம்பரம் வெளியில் இருந்தால் சரிப்படாது என்று சொல்லியே அவரை உள்ளே தள்ளியுள்ளனர். 
-மணிசங்கர் அய்யர் (மாஜி காங் அமைச்சர்)

*மக்களின் அடிப்படை வாழ்வாதார பிரச்னைகளை முன்னிறுத்தி, மக்களை அணி திரட்டி, ஆட்சியாளர்களுக்கு எதிராக போராட்டங்களை நாம் நடத்த வேண்டும். அனைத்து ஜனநாயக சக்திகளையும் ஒன்றிணைத்து, மதசார்பற்ற ஜனநாயக குடியரசான நம் நாட்டை பாதுகாக்க வேண்டும். 
-பிரகாஷ் காரத் (மார்க்சிஸ்ட் நிர்வாகி)

*பால் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் கறக்கும் பால் முழுவதையும் ‘ஆவின்’ நிறுவனத்திற்கு மட்டுமே வழங்க வேண்டும். சில்லரையாக விற்பனை செய்யக்கூடாது! என தமிழக அரசு பிறப்பித்திருந்த உத்தரவு வாபஸ் பெறப்பட்டுள்ளது. எனவே அடுத்த மாதத்தில் நடத்த இருந்த போராட்டம் வாபஸ். -செய்தி.

*தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் வாரச்சந்தையில் மட்டும் நேற்று ரெண்டரை கோடி ரூபாயை தாண்டி ஆடு, கோழிகள் விற்பனையாகியுள்ளன. -செய்தி.

*என் அப்பாவின் உழைப்பு நூறு சதவீதத்துக்கும் மேல். அவர் நல்ல நடிகர் மட்டுமில்லை, நல்ல அப்பாவும் கூட. நடிகராக இல்லாமல், அப்பாவாக இருந்து என்னை இயக்கினார். அவர் இல்லாமல் நான் இல்லை. என் பேச்சு, நடை, எல்லாமே என் அப்பாதான். என்னை பார்ப்பது, அப்பாவின் இன்னொரு முகம்தான். -ஆதித்யவர்மா (விக்ரமின் மகன்)

*விஜய்யுடன் நடித்ததை மறக்கவே முடியாது. பிகில் படத்துக்காக கால்பந்தாட்ட வீரராகவே மாறியிருந்தார். எங்களுக்கும் பல நுணுக்கங்களை கற்றுத் தந்தார். அவர் இவ்வளவு சிறந்த நடிகராக இருப்பார் என நினைக்கவில்லை. 
-இந்துஜா (நடிகை)

*சசிகலா உரிய நேரத்தில் சிறையிலிருந்து வெளியே வருவார். அ.தி.மு.க. ஆட்சியில் எந்த மாற்றமும் ஏற்படாது. அதே நேரத்தில், இந்த ஆட்சி முடிந்ததும் அ.தி.மு.க.வும் காணாமல் போய்விடும். எங்கள் இயக்கத்திலிருந்து அ.தி.மு.க.வுக்கு தொண்டர்கள் செல்ல வாய்ப்பே இல்லை. 
-தினகரன் (அ.ம.மு.க. பொதுச்செயலாளர்