ஐநா பொதுச்சபை கூட்டத்தில் கலந்துகொள்ள வரும் பாகிஸ்தான் பிரதமருடன்  இந்திய பேச்சு வைத்துக்கொள்ளாது  இந்தியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. ஐநாவில் இந்தியாவுக்கான நிரந்தர உறுப்பினர். இவ்வாறு தெரிவித்துள்ளார். 

காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் இந்தியாவை பழிவாங்க துடித்து வருகிறது. இந்தியாவின் மற்றொரு எதிரியான சீனாவின் ஆதரவுடன் பாகிஸ்தான் இந்தியாமீது ஐநா மன்றத்தில் புகார் கொடுத்துள்ளது. காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவை சர்வதேச அரங்கத்தில் நிற்கவைத்து அவமானப்படுத்த வேண்டும் என்பதுடன், காஷ்மீர் விவகாரத்தில் சர்வதேச நாடுகளை தலையிடசெய்ய வேண்டும் என்பதே பாகிஸ்தானின் திட்டம்,

இந் நிலையில் ஐநா மன்றத்தின் விசாரணை  வரும் 27 ஆம் தேதி முதல் அடுத் ஒரு வாரகாலத்திற்கு நடைபெற உள்ளது. அதில்  இந்திய பிரதமர் மோடியும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானும் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளனர். அக்கூட்டத்தில்  காஷ்மீர் பிரச்சினையை எழுப்பப்போவதாக இம்ரான்கான் ஏற்கனவே அறிவித்துள்ளார். 

இந்நிலையில், இந்தியாவின் நிலைப்பாடு குறித்து ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி சையது அக்பருதீன் செய்தியாளர்களுக்கு விளக்கியுள்ளார். அதில் இதுவரை பயங்கரவாதத்தை தேசியமயமாக்கிய பாகிஸ்தான், இப்போது இந்தியா மீதான வெறுப்பு பிரச்சாரத்தை  நாடு முழுவதும் பரப்பியுள்ளது. வரும் கூட்டத்தில்  பாகிஸ்தான் காஷ்மீர் விவகாரத்தில் எந்தளவிற்கு இறங்கிப்பேசி தனக்கான ஆதரவை பெருக்கு முயன்றாலும் இந்தியா தன்னுடைய உறுதியான நிலைபாட்டிலிருந்து விலகாமல், உயர்வாகவே நடந்து கொள்ளும். அப்போது அங்கு வரும் பாகிஸ்தானிடம்  இந்தியா எவ்வித பேச்சும் வைத்துக்கொள்ளாது. ஆனால், அனைத்தையும் அமைதியாக எதிர்கொண்டு, முறையாக பதில் கொடுக்கப்படும் என்று  அப்போது அவர் கூறினார்