எப்போதும் சமூகவலைதளங்களில் பரபரப்பாக இருக்கும் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா இப்போது அடக்கி வாசித்து வருகிறார். 

நேற்று நிர்மலா சீதாரமன் அறிவித்த ரூ.1.70 லட்சம் கோடி திட்டங்களுக்கு இப்போது நன்றி தெரிவித்துள்ளார். ‘’கொரோனா தாக்குதலிலிருந்து காப்பாற்றிக் கொள்ள மக்கள் தங்களை 21 நாட்கள் தனிமைப் படுத்திக்கொள்ள வீட்டிலேயே இருக்க வேண்டும் என கேட்டுக் கொண்டதால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை எளிய மக்களுக்கு பிரதமர் ஏழை மக்கள் நல்வாழ்வு திட்டம் மூலம் 1 லட்சத்து 70 ஆயிரம் நிதி ஒதுக்கியமைக்கு பிரதமருக்கு நன்றி.

வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் 4.47 சதவீதமாக குறைக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. வங்கிகளில் கடன் வாங்கியோர், தவணை தொகையை 3 மாதங்களுக்கு செலுத்த விலக்கு அளிக்கப்பட்டுள்ளது’’ எனத் தெரிவித்துள்ளார்.

அவர் ஊரடங்கால் வீட்டிற்குள் இருப்பதாக தெரிவ்கிறது அந்தநேரங்களில் வீட்டில் உள்ள நூலகத்தில் உள்ள புத்தகங்களை படிப்பதாகவும் அவர் தகவல் தெரிவித்துள்ளார். புத்தகங்களில் அவர் மூழ்குவதாலோ அல்லது அவரது அட்மின் வரமுடியாததாலோ  அவரது சமூகவலைதளப்பக்கங்கள் காத்தாடுவதாக எதிர்கட்சியினர் கருத்து தெரிவித்துள்ளனர்.