தமிழகத்தின் முதலமைச்சராக உள்ள ஸ்டாலின் தன் சொந்த கட்சி தொண்டர்களை கட்டுபடுத்த முடியாத தலைவராக உள்ளார். கருணாநிதி இறப்பு வரை ஸ்டாலினை ஏன் தலைவராக்கவில்லை என புரிகிறதா என சி.வி.சண்முகம் ஆவேசமாக கூறியுள்ளார். 

தமிழகத்தின் முதலமைச்சராக உள்ள ஸ்டாலின் தன் சொந்த கட்சி தொண்டர்களை கட்டுபடுத்த முடியாத தலைவராக உள்ளார் என மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் விமர்சனம் செய்துள்ளார். 

அதிமுகவின் 51-வது ஆண்டு துவக்க விழாவையொட்டி விழுப்புரம் அதிமுக கட்சி அலுவலகத்தில் சி.வி.சண்முகம் கொடியேற்றி வைத்தார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம்;- அதிமுகவின் சட்டத்திட்டங்களை மாற்றினால் எம்.ஜி.ஆரின் ஆன்மா மன்னிக்காது' என்று இன்றைக்கு சொல்லுகின்ற ஓபிஎஸ்க்கு அம்மாவின் மறைவிற்குப் பிறகு பதவி ஆசைப்பிடித்துவிட்டது.

இதையும் படிங்க;- சாதி பார்க்கும் சசிகலா.? எல்லாத்துக்கும் அதிமுகவின் ‘அந்த’ 4 பேர் காரணம் - புலம்பும் அதிமுகவினர்

முதலமைச்சர் பதவி தனக்கு இல்லையே என்ற ஆத்திரத்தில், கட்சியையும் இரட்டை இலை சின்னத்தையும் முடக்கினார். அதிமுகவை முடக்கிய ஓபிஎஸ்க்கு அம்மா, எம்.ஜி.ஆர், அதிமுக பற்றி பேசுவதற்கு அருகதையே கிடையாது. சாதாரண தொண்டனுக்கு இருக்கும் உரிமையும் ஓபிஎஸ்க்கு கிடையாது. சாத்தான் வேதம் ஓதக்கூடாது. இதை பற்றி சொல்வதற்கு சில தகுதிகள் வேண்டும். அந்த தகுதி, தராதரம் ஓபிஎஸ்க்கு இல்லை.

பராசக்தியின் வசனத்தை மனப்பாடம் செய்து கொண்டிருக்கின்ற ஓபிஎஸ், அவரது மகன் ரவீந்ததிரநாத்தும் ஸ்டாலினை புகழ்ந்து பேசிக் கொண்டு அதிமுகவை அழிக்க நினைக்கிறார்கள். விதிகளைத் திருத்தக் கூடாது' என சொல்லும் ஓ.பி.எஸ் அவருடைய சுயலாபத்திற்காக, எம்.ஜி.ஆரால் கொண்டுவரப்பட்ட பொதுச்செயலாளர் பதவியை ரத்து செய்து 2017-ல் மாற்றினார். அதுவரையில் கட்சியிலேயே இல்லாத ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியை வேண்டும் என்று சொல்லி கொண்டுவந்தது யார்? இந்த ஓ.பி.எஸ்-தான். அவர் சொன்னதிலே ஒன்று உண்மை. எம்.ஜி.ஆர், அம்மாவின் ஆன்மாக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றன. அவை மன்னிக்காது.

திமுக என்ற தீய சக்தியை விரட்டி அடிக்க தொடங்கப்பட்ட அதிமுக,51-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. 32 ஆண்டுகள் அதிமுக தமிழ்நாட்டில் ஆட்சி புரிந்த இயக்கமாக இருந்திருக்கிறது. தமிழகத்தின் முதலமைச்சராக உள்ள ஸ்டாலின் தன் சொந்த கட்சி தொண்டர்களை கட்டுபடுத்த முடியாத தலைவராக உள்ளார். கருணாநிதி இறப்பு வரை ஸ்டாலினை ஏன் தலைவராக்கவில்லை என புரிகிறதா என சி.வி.சண்முகம் ஆவேசமாக கூறியுள்ளார். 

இதையும் படிங்க;- ஒரு சிலரின் நலனுக்காக அதிமுக சட்ட விதியில் மாற்றம்..! இபிஎஸ்யை விளாசிய ஓபிஎஸ்