அதிமுக என்ன பாடத்தைக் கற்க வேண்டும்? நிவர் புயலை எப்படி எதிர்கொள்வது, அதிலிருந்து மக்களை எவ்வாறு காப்பாற்றுவது என அரசு சரியான முறையில் நடவடிக்கை எடுத்துள்ளது மு.க.ஸ்டாலினுக்கு பதிலடி கொடுடுத்துள்ளார்.

வட மாவட்டங்களில் நிவர் புயர் கோரத்தாண்டவம் ஆடியது. இந்த புயலால் சென்னை, கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இரண்டு நாட்களாக பலத்த காற்றுடன் மழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் சாலைகள் தண்ணீரில் மூழ்கியதாலும், மரங்கள் விழுந்ததாலும் போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டது.

இந்நிலையில், சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் பார்வையிட்டார். அதன் பின்னர் அவர் வெளியிட்ட அறிக்கையில், கடந்த கால புயல் மற்றும் டிசம்பர் 2015 பெருவெள்ளத்திலிருந்து எவ்வித பாடத்தையும் அ.தி.மு.க. அரசு கற்றுக் கொள்ளவில்லை என்று பொதுமக்கள் ஒரே குரலில் சொன்னதையும் கேட்க முடிந்தது. மழை நீர் தேங்கி நிற்கும் பகுதிகளாகக் கண்டறியப்பட்ட பகுதிகளில் இன்னும் இந்த 10 ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் அதே நிலையில்தான் நீடிக்கிறது. குடிசை மாற்று வாரிய வீடுகள் உள்ள பகுதிகள் மட்டுமின்றி - தாழ்வான பகுதிகள்- முக்கியச் சாலைகள் எல்லாமே தண்ணீரில் மூழ்கி, கடல் போல் காட்சியளிக்கின்ற நேரத்தில், எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் மழை நீர் தேங்கவில்லை என்று மலையளவு பொய்யை மனம் கூசாமல் முதலமைச்சரும் - அ.தி.மு.க. அமைச்சர்களும் கூறி வருவது மிகுந்த வேதனையளிக்கிறது.

கஜா புயல்  2015 பெரு வெள்ளம் போன்றவற்றில் பாதிக்கப்பட்டவர்களைக் கைவிட்டது போல்,  இந்த நிவர் புயலால் பாதிக்கப்பட்டுள்ளவர்களையும்  கைவிடும் நோக்கில், அ.தி.மு.க. அரசு ஏனோதானோ என்ற முறையில் செயல்படக் கூடாது.  பாதிக்கப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் உடனடி நிவாரணமாக 5,000 ரூபாய் ரொக்கமாக வழங்கிட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இந்நிலையில். கடலூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்த பின்னர் இதற்குப் பதிலளித்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ;- அதிமுக என்ன பாடத்தைக் கற்க வேண்டும்? நிவர் புயலை எப்படி எதிர்கொள்வது, அதிலிருந்து மக்களை எவ்வாறு காப்பாற்றுவது என அரசு சரியான முறையில் நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால் உயிர்ச்சேதம் குறைக்கப்பட்டதோடு, பொருட்சேதம் எதுவும் ஏற்படவில்லை. அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அதிகாரிகள் என அனைவரும் இரவு பகல் பாராமல் எடுத்த நடவடிக்கை காரணமாக பெரும் பாதிப்பைத் தவிர்த்துள்ளோம் என்று கூறினார்.