எடப்பாடி தொகுதியில் போட்டியிடும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தபால் வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை வகித்து வருகிறார். தமிழகத்தில் தபால் வாக்கு எண்ணிக்கையில் திமுக 44 இடங்களிலும் அதிமுக கூட்டணி 33 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது. அமமுக 1 இடத்திலும் முன்னிலை வகிக்கிறது. கோவை தெற்கில் போட்டியிட்ட கமல்ஹாசன் முன்னிலை வகிக்கிறார்.

அதேபோல் 30 தொகுதிகளைக் கொண்ட புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி 5 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 4 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. அதேபோல் அசாம் மாநிலத்தில் பாஜக கூட்டணி 29 தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணி 18 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது. 

கேரளா  மாநிலத்தில் இடதுசாரி கூட்டணி 61, காங்கிரஸ் கூட்டணி 47, பாஜக 4 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. மே.வங்கம் மாநிலத்தில் திரிணாமூல் கூட்டணி 82 தொகுதிகளிலும், பாஜக 80 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது.