நோபல் ப்ரிக்ஸ் நிறுவனத்திற்கும், உதயநிதி அறக்கட்டளைக்கும் என்ன தொடர்பு? அண்ணாமலை கேள்வி?
நோபல் ப்ரிக்ஸ் நிறுவனத்திற்கும், உதயநிதி அறக்கட்டளைக்கும் என்ன தொடர்பு என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
நோபல் ப்ரிக்ஸ் நிறுவனத்திற்கும், உதயநிதி அறக்கட்டளைக்கும் என்ன தொடர்பு என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். முன்னதாக உதயநிதி அறக்கட்டளைக்குச் சொந்தமான, 36.3 கோடி ரூபாய் மதிப்புள்ள அசையா சொத்துக்களும், வங்கி கணக்கில் உள்ள 34.7 லட்சம் ரூபாயும் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை அறிவித்திருந்தது. இந்த நிலையில், நோபல் ப்ரிக்ஸ் நிறுவனத்திற்கும், உதயநிதி அறக்கட்டளைக்கும் என்ன தொடர்பு என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
இதையும் படிங்க: 3 மருத்துக்கல்லூரிகள் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட விவகாரம்... வைகோ கண்டனம்!!
இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், திமுக மீதான குற்றச்சாட்டுகளை வெளியிட்ட போது நோபல் ஸ்டீல் நிறுவனத்தின் 1000 கோடி ரூபாய் முதலீடு குறித்த கேள்வியை எழுப்பியிருந்தோம். முதலீடும் வரவில்லை முறைகேடான முதலீடு என்று எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுக்கு இன்று வரை பதிலும் வரவில்லை.
இதையும் படிங்க: யார் இந்த அசோக்குமார்.?செந்தில் பாலாஜி சகோதரரின் முழு பின்னனி என்ன.? வருமான வரி சோதனையில் ஆவணங்கள் சிக்கியதா.?
முறைகேடான பணப்பரிவர்த்தனை மேற்கொண்ட உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை அமலாக்கத் துறையிடம் சிக்கியுள்ளது. நோபல் ப்ரிக்ஸ் நிறுவனம் இயங்கி வந்த அதே விலாசத்தில் உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை இயங்கி வருகிறது. இந்த இரு நிறுவனங்களுக்கு உள்ள தொடர்பு என்ன? இதற்காவது பதில் வருமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.