மத்தியில் சர்வாதிகார அரசாங்கமாக உள்ளது. பெகாசஸ் விவகாரம் நாடாளுமன்றத்தில் விவாதிக்கபட உள்ளது. ஜனநாயகத்தின் மண்பே நாட்டில் உள்ள பிரச்சனைகளை விவாதிக்க கூடியது தான். நாடாளுமன்றம். ஜெர்மனி நாடாளுமன்றத்தில் ஹிட்லர் பேசிவிட்டால் கைதட்டி கலைந்து செல்ல வேண்டும். இங்கிலாந்து, இந்திய நாடாளுமன்றம் அப்படி அல்ல.
வெள்ளை அறிக்கை வெளியிட்டாலும், தமிழக அரசின் பட்ஜெட் வரவேற்க கூடிய இருக்கும் என சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி சென்ற தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ். அழகிரி கூறினார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, தமிழக அரசு மக்கள் நலன் அரசாக உள்ளது. மக்களுக்கு தேவையான வற்றை நிறைவேற்றுவது தான் அரசாங்கத்தின் கடமை. அந்த கடமையை தமிழக அரசு நிச்சயமாக செய்யும். பட்ஜெட்டில் ஏராளமான திட்டங்கள் வரும். தொழில் வளர்ச்சி வரும். ஏழ்மையை ஒழிப்ப்தற்கான திட்டங்கள் இருக்கும். ஏழை-எளியவர்களுக்கான மேம்பாட்டு திட்டங்கள் இருக்கும். வரவேற்ககூடிய வரவு- செலவு திட்டமாக இருக்கும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான 100 நாள் ஆட்சி சிறப்பாக நடந்து உள்ளது.

நல்லவற்றை செய்ய வேண்டும் என முதலமைச்சர் முயற்சி செய்து வருகிறார். அவரது முயற்சி பாராட்டத்தக்கது. வெள்ளை அறிக்கையே நாட்டின் நிலைமையை விளக்கி சொல்கிறது. பொருளாதார ரீதியாக தமிழகம் எவ்வாறு பாதிக்கப்பட்டு உள்ளது என்பதை எடுத்து சொல்லி இருக்கிறார்கள். கடந்த 10 ஆண்டுகளா அதிமுக ஆட்சியில் அன்றாட அரசு செலவுக்கு கூட கடன் வாங்கி செய்து உள்ளனர். இவ்வளவு பொருளாதார இடர்பாடுகள் இருந்தாலும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றப்படும் என நிதியமைச்சர் கூறியது பாராட்டத்தக்கது. பொருளாதார நிலையை காரணம் காட்டி திட்டங்களை குறைப்பதாக கூறவில்லை. திட்டங்களை நிறைவேற்ற போகிறோம் என கூறியுள்ளார். தமிழக அரசுக்கு வரவேண்டிய வருமானமே ஒரு லட்சம் கோடிக்கு மேல் உள்ளது. அதில் கவனிப்பற்று இருப்பதை வசூலித்து திட்டங்கள் செயல்படுத்தப்படும் .

அரசு ஒரு காரியத்தை செய்தால் அவர்களுக்கு வந்த தகவலின் பேரில் நடவடிக்கை எடுத்து இருக்கிறார்கள் என்று அர்த்தம். இல்லை என்றால் நீதிமன்றம் முலம் தீர்ப்பு வரும். ஆனால் இதை நடவடிக்கையை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை எடுப்பதாக கூறுவது தவறு என எஸ்.பி வேலுமணி வீட்டில் நடந்த ரெய்டு குறித்து அழகிரி தெரிவித்தார்.
மத்தியில் சர்வாதிகார அரசாங்கமாக உள்ளது. பெகாசஸ் விவகாரம் நாடாளுமன்றத்தில் விவாதிக்கபட உள்ளது. ஜனநாயகத்தின் மண்பே நாட்டில் உள்ள பிரச்சனைகளை விவாதிக்க கூடியது தான். நாடாளுமன்றம். ஜெர்மனி நாடாளுமன்றத்தில் ஹிட்லர் பேசிவிட்டால் கைதட்டி கலைந்து செல்ல வேண்டும். இங்கிலாந்து, இந்திய நாடாளுமன்றம் அப்படி அல்ல. எல்லாவற்றையும் மக்கள் பிரச்சனையும் பேசுவார்கள். பேசவும் விவாதிக்கவும் தான் நாடாளுமன்றம். இத்தாலி உளவு நிறுவனம் செய்து இருக்கிற விசயத்தை விவாதிக்க வேண்டும் என எதிர்கட்சிகள் கேட்கிறார்கள். விவாதிப்பை ஏற்று அரசிடம் உள்ள தகவல்களை தெரிவிக்க வேண்டும்.

வியூகம் தவறானதா இல்லையா என்பதை பிரதமர், உள்துறை மந்திரி விளக்க வேண்டியது கடமை. அமெரிக்காவில் வாட்டார் கேட் ஊழல் வந்த போது அமெரிக்க பாராளுமன்றம் விவாதித்தது. பிரதமர் மோடி விவாதிக்க தயங்குவது ஏன். எதிர்கட்சிகள் முடக்கவில்லை. நாடாளுமன்றத்தை நடத்தி விவாதிக்க வேண்டும் என்று கேட்கிறோம். ஆனால் அரசு விவாதிக்க மாட்டோன் என்று கூறி நாடாளுமன்றத்தை 2 தினங்களுக்கு முன் முடித்து கொண்டது. நாடாளுமன்றம் நிலையற்று போனதற்கு மோடி அரசு தான் காரணம் எதிர்கட்சிகள் அல்ல. இவ்வாறி அவர் கூறினார்.
