Asianet News TamilAsianet News Tamil

அதிமுகவில் என்ன நடக்கிறது..? அதிர வைக்கும் தொண்டனின் கடிதம்..!

சசிகலா கொடுத்த பதவியை வைத்துக் கொண்டு அவரை கடுமையாக விமர்சிப்பதா? என அதிமுகவில் ஒரு தரப்பினர் எடப்பாடியை வசைபாடி வருகின்றனர். 

What is happening in AIADMK ..? Volunteer's letter that shakes ..!
Author
Tamil Nadu, First Published Oct 30, 2021, 5:59 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

அதிமுகவில் சசிகலாவை சேர்த்துக் கொள்ளவே முடியாது என எடப்பாடி பழனிசாமி அடம்பிடித்து வருகிறார். இதற்காக சசிகலா மீது கடும் விமர்சனங்களை முன் வைத்து வருகிறார். ஆனால், ஓ.பி.எஸ் கூறிய கருத்துக்கள் சசிகலாவை ஆதரிப்பதாகவே தெரிகிறது. What is happening in AIADMK ..? Volunteer's letter that shakes ..!

இந்நிலையில் சசிகலா தென்மாவட்டங்களில் சுற்றுப்பயணத்தை தொடங்கி விட்டார். இது அதிமுகவில் பூகம்பத்தை கிளப்பி இருக்கிறது. சசிகலா கொடுத்த பதவியை வைத்துக் கொண்டு அவரை கடுமையாக விமர்சிப்பதா? என அதிமுகவில் ஒரு தரப்பினர் எடப்பாடியை வசைபாடி வருகின்றனர். இந்நிலையில், மனசாட்சி கொண்டோர் பார்வைக்கு... அதிமுக தொண்டனின் கடிதம் என்கிற தலையில் ஒரு கடிதம் சமூக வலைதளங்களில் படுவேகமாக பகிரப்பட்டு வருகிறது.

அதில், ‘’புரட்சித் தலைவரால் தொடங்கப்பட்டு,புரட்சி தலைவியால் கோடிக்கணக்கான தொண்டர்கள் கொண்ட இயக்கமாக உயர்ந்து நிற்கும் கழகத்தின் அனைத்து தொண்டர்களுக்கும் உங்களில் ஒருவனின் உள்ளம் திறந்த மடல்...What is happening in AIADMK ..? Volunteer's letter that shakes ..!

திருமதி சசிகலாவை அதிமுகவில் சேர்த்து கொள்வீர்களா என பத்திரியாளர்கள் கேட்ட கேள்விக்கு, அதுகுறித்து தலைமை கூடி முடிவெடுக்கும் என்று கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் சொன்ன கருத்து பரபரப்பையும்,சலசலப்பையும் ஏற்படுத்தி உள்ளது. Opsயின் முதல்வர் பதவியை பறித்தவர் சசிகலா. ஆனால், அதனை மறந்து ஒன்றுபட்ட அதிமுகவால் தான் எதிர்காலத்தை உருவாக்க முடியும் என..அன்று சசிகலா தனக்கு ஏற்படுத்திய துன்பத்தைக் கூட கண்ணியத்தோடு கடந்து போகிறார் ஓபிஎஸ். ஆனால்...முதல்வர் பதவியை தனக்கு உருவாக்கி தந்த சசிகலாவை நாய் என்று விமர்சிக்கிறார் இபிஎஸ். 

பதவியை பறித்தவரிடம் கூட பண்பு காட்டுகிறார் ஓபிஎஸ் என்றால், பதவியை காலில் விழுந்து பெற்ற இபிஎஸ்யோ, தனக்கு பதவி தந்தவரை நாய் என்று விமர்சிக்கிறார். இபிஎஸ்க்கு சசிகலா உருவாக்கி தந்தது முன்சீப் பதவியல்ல,முதல்வர் பதவி. அப்படியிருக்க, சசிகலாவின் கணவர் இறந்ததற்கு ஒரு வரியில் அனுதாபம் தெரிவிப்பதற்கு கூட மறந்த மனிதப் பிழையாக மாற்றியது எடப்பாடியின் பதவி சுகம்.What is happening in AIADMK ..? Volunteer's letter that shakes ..!

இந்நிலையில், ஓபிஎஸ்யோடு ஒட்டிக்கொண்டு ஒரே நேரத்தில் MP  மற்றும் MLA வாய்ப்புகளை பெற்றவர் கே.பி.முனுசாமி. இந்த முனுசாமி இப்போது எடப்பாடியின் திடீர் பக்தராக மாறி OPS ன் கருத்தை சாதிப் பாசம் என்று குற்றம் சுமத்துகிறார். இதில் எங்கே இருக்கிறது சாதிப் பாசம்? சசிகலா சாதி பார்த்திருந்தால் எடப்பாடியை முதலமைச்சராக ஆக்கி இருப்பாரா? ஓபிஎஸ் சாதி பார்த்திருந்தால் சசிகலாவிற்கு எதிராக தர்மயுத்தம் நடத்தி இருப்பாரா? 

இவ்வளவு ஏன்? கேபி.முனுசாமிக்கு எம்எல்ஏ, எம்பி என ஒரே சேர பதவி வர காரணமாக இருந்தவர் ஓபிஎஸ். ஆனால்... 2014ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாமகவின் அன்புமணி ராமதாசு வெற்றி பெற உள்வேலை பார்த்ததால் அன்றைக்கு அம்மாவால் கழகத் துரோகி என விமர்ச்சிக்கப் பட்டு மாவட்ட செயலாளர் மற்றும் மந்திரி பதவிகளில் இருந்து நீக்கப்பட்டவர் தான் இந்த சாதிபாரா நீதிமான் முனுசாமி.What is happening in AIADMK ..? Volunteer's letter that shakes ..!

இவ்வளவு ஏங்க... அதிமுகவில் உருவாக்கப் பட்ட வழிகாட்டும் குழுவில் JCD பிரபாகர்,சோழவந்தான் மாணிக்கம், மதுரை கோபாலகிருஷ்ணன், உளுந்தூர்பேட்டை மோகன், மனோஜ் பாண்டியன் என வன்னியர்,தேவேந்திரகுலவேளாளர்,யாதவர்,பிள்ளை, நாடார் என்று தனது சாதியை முற்றிலும் தவிர்த்து விட்டு அனைத்து சமூகத்திற்கும் வாய்ப்பு கொடுத்தவர் ஓபிஎஸ்.

ஆனால்.. தங்கமணி,வேலுமணி என தன் கவுண்டர் சாதிக்கு மட்டுமே பிரதான வாய்ப்புகளை வழங்கி அரசியல் வழிகாட்டும் குழுவில் தன் சாதி பாசத்தை அப்பட்டமாக காட்டியவர் இபிஎஸ். மேலும், தன் ஆட்சி காலத்தில் எழில்,சத்தியமூர்த்மி,ஈஸ்வரமூர்த்தி என்று தன்னை சுற் றி தனது இனத்தவர்களை வைத்துக்கொண்டு,(சாதாசிவம்)கவுண்டர் வழிகாட்டுதலில் இன்றுவரை கழகத்தை கவுண்டர் கழகமாக உருமாற்றி வருவது எடப்பாடி தான். எனவே, சாதி அரசியல் செய்வதாக ஓபிஎஸ் மீது குற்றம் சுமத்த முயல்வது பாவ காரியம் ஆகும்.What is happening in AIADMK ..? Volunteer's letter that shakes ..!

குத்துக்கோலால் இருவரை கொலை செய்துவிட்டு, கட்டபஞ்சாயத்து நடத்தி,ஒரு ஏக்கர் நிலத்தை எழுதிக் கொடுத்து தப்பித்தது தொடங்கி, கொடநாடு விவகாரத்தில் ஐந்து உயிர்களை பரலோகத்திற்கு அனுப்பியது வரை கொடூர குற்றங்களின் முகமாகவும்,முகாம் ஆகவும் இருப்பது எடப்பாடி தான்.

இறுதியாக ஒரு கேள்வி...உங்களுக்கு முதல்வர் பதவி கிடைக்கச்  செய்தவர் நாய் என்றால்,அவரின் காலில் விழுந்து பதவி வாங்கிய நீங்கள் நாயினும்....ஆள் தானே. உங்களைப் போன்றவர்களை பற்றி அன்றே கண்ணதாசன் சொன்ன வரிகள் தான் இறுதியாக நமது கழகத் தொண்டர்களின் காதில் கேட்கிறது.

அது என்ன தெரியுமா...  *நன்றி மறந்த மனிதனை விட...
நாய்கள் மேலடா....*

What is happening in AIADMK ..? Volunteer's letter that shakes ..!

எது எப்படியோ...தனக்கு பிறகும் நூறாண்டு கடந்தும் கழகமே ஆளும் என்ற அம்மாவின் ஆசையை நிறைவேற்றிட அவரின் ஆன்மாவே வழிகாட்டும் என்ற மாறாத நம்பிக்கை உடன்... கழகத்தை உயிராக நேசிக்கும் மனசாட்சி உள்ள உண்மைத் தொண்டன்.

Follow Us:
Download App:
  • android
  • ios