4 மாநில பாஜக தலைவர்களுக்கு ஏற்பட்ட நிலை அண்ணாமலைக்கு ஏற்படலாம்! உருட்டு மன்னன்! போலிமலை! விளாசும் காயத்ரி.!
பாஜகவின் 4 மாநில தலைவர்கள் மாற்றப்பட்டனர். டெல்லிக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்பதை இது காட்டுகிறது. டெல்லி மற்றும் தமிழ்நாடு மூத்த தலைவர்களை மதிக்காத அண்ணாமலை அதே போல் அளிக்க தயங்க மாட்டார்கள்.
செந்தில் பாலாஜி சாராய அமைச்சர் என்றால் நீங்கள் சாராய போதை அடிமை தலைவர். பிறரை அழைக்கும் புனைப்பெயர் உங்களை பிரபலமாக்காது என அண்ணாமலையை காயத்ரி ரகுராம் கடுமையாக சாடியுள்ளார்.
பாஜக மாநில தலைவராக பொறுப்பேற்றதில் இருந்து அண்ணாமலைக்கும், காயத்ரி ரகுராம் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வந்தது. இதனையடுத்து, பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை எனவும், வார் ரூம் நடத்தி பாஜக மூத்த நிர்வாகிகள் மிரட்டப்படுவதாக குற்றம்சாட்டை கூறி பாஜகவில் இருந்து காயத்ரி ரகுராம் வெளியேறினார். அன்று முதல் அண்ணாமலை குறித்து தினசரி விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். இந்நிலையில் அண்ணாமலை அளித்த பேட்டியை பகிர்ந்து பல்வேறு விமர்சனம் செய்துள்ளார்.
இதையும் படிங்க;- திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஜாதிய வன்கொடுமை தலைவிரித்தாடுகிறது... அண்ணாமலை குற்றச்சாட்டு!!
இதுதொடர்பாக பாஜகவின் முன்னாள் நிர்வாக காயத்ரி ரகுராம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- ஊழலற்ற வாட்ச் பில் காட்டுங்கள் உங்கள் ஊழலற்ற அறக்கட்டளை நிதி நன்கொடைகளைக் காட்டு. ஏப்ரல் 14 அன்று நீங்கள் ஏன் ஊழலுக்கு எதிராக நடக்கவில்லை. அதற்கு பதிலாக நீங்கள் டெல்லி செல்கிறீர்கள். போலி வாக்குறுதி எம்பி சீட்களுக்காக, ஏன் எந்த ஊடகமும் ஆருத்ரா, IFS மற்றும் பிற நிறுவனங்களைப் பற்றி கேள்வி கேட்கவில்லை & எத்தனை பேர் உங்களிடம் பணத்தை திரும்பப் பெறப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பாருங்கள்.
இதையும் படிங்க;- கூட்டணி கட்சியை வளர்க்க நினைப்பவர்கள் முட்டாள்கள்..! டெல்லி செல்லும் முன் அண்ணாமலை பரபரப்பு பேட்டி
உருட்டு மன்னன் உங்கள் ஊழல் பற்றி கேட்டால் ஏன் கண்களை தோண்டி எடுக்கிற ?. திமுக ஊழலைக் கூட தேடுவதற்கு ED மற்றும் வருமான வரித்துறை உள்ளது, உங்கள் எக்ஸெல் ஷீட் புகார் தேவையில்லை. அவர் சாராய அமைச்சர் என்றால் நீங்கள் சாராய போதை அடிமை தலைவர். பிறரை அழைக்கும் புனைப்பெயர் உங்களை பிரபலமாக்காது.
அருவருப்பான செயல். பாஜகவின் 4 மாநில தலைவர்கள் மாற்றப்பட்டனர். டெல்லிக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்பதை இது காட்டுகிறது. டெல்லி மற்றும் தமிழ்நாடு மூத்த தலைவர்களை மதிக்காத அண்ணாமலை அதே போல் அளிக்க தயங்க மாட்டார்கள். அனைத்து போலிமலை ரூ.200 ரசிகர் மன்றங்களுக்கும் எச்சரிக்கை. என்ன உங்கள் குழுவில் இருநூறு பேர் மட்டுமே இருப்பார்கள். டெல்லி அவர்களின் பாணியில் தேவையற்ற களைகளை எப்படி எடுக்கும் என்று பார்க்க வேண்டுமா? வார்ரூம் முட்டாள்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.