திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஜாதிய வன்கொடுமை தலைவிரித்தாடுகிறது... அண்ணாமலை குற்றச்சாட்டு!!

திமுக ஆட்சிக்கு வந்தது முதல் சாதி வன்கொடுமை தமிழகத்தில் தலைவிரித்தாடுவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

caste violence has been rampant in dmk govt says annamalai

திமுக ஆட்சிக்கு வந்தது முதல் சாதி வன்கொடுமை தமிழகத்தில் தலைவிரித்தாடுவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். இதுக்குறித்த அவரது டிவிட்டர் பதிவில், தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பேரூராட்சியில், திமுகவைச் சேர்ந்த முன்னாள் பஞ்சாயத்து தலைவி ஆயிஷா கல்லாஸி, ஜாதியைச் சொல்லி அவமானப்படுத்தியதாக, 30 ஆண்டுகளுக்கு மேலாக தூய்மை பணியாளராக வேலை செய்து வந்த சுடலைமாடன் தற்கொலை செய்துள்ளார்.

இதையும் படிங்க: ராகுல் காந்தி மீதான சூரத் நீதிமன்ற நடவடிக்கை நகைச்சுவையாக உள்ளது - சீமான் விமர்சனம்

திறனற்ற திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே, எளிய மக்கள் மீதான ஜாதிய வன்கொடுமை தலைவிரித்தாடுகிறது. குற்றவாளிகள் தங்கள் கட்சிக்காரர்கள் என்பதால் அவர்கள் மேல் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியப் போக்கைக் கையாளுவதால், இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. மீண்டும் இது போன்ற ஜாதியக் கொடுமைகள் நடக்காத வண்ணம், உடனடியாக குற்றவாளிகள் மேல் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன்.

இதையும் படிங்க: இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை... பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!!

பொதுமக்களுக்கு ஒரு வேண்டுகோள்: தற்கொலை எண்ணம் வந்தால் தற்கொலைத் தடுப்பு மையங்களை தொடர்பு கொள்ள தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104க்கு அல்லது சினேகா தொண்டு நிறுவனத்தின் 044 -24640060 ஹெல்ப்லைன் எண்ணிற்கும் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios