ஓபிஎஸ்-இபிஎஸ் உச்சக்கட்ட மோதல்.! பொதுக்குழு தொடங்கி உச்சநீதிமன்ற இறுதி தீர்ப்பு வரை அதிமுகவில் நடந்தது என்ன..?

அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்த ஜூன் மாதம் அறிவிக்கப்பட்டதில் இருந்து ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இடையே மோதல் தொடங்கியது. இதனையடுத்து நடைபெற்ற பொதுக்குழுவில் ஓபிஎஸ் நீக்கப்பட்டதும், இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றதும் அடுத்தடுத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் அதிரடியாக உத்தரவிட்டுள்ளனர்.
 

What happened in AIADMK from the General Assembly to the Supreme Court final verdict

அதிமுகவில் அதிகார போட்டி

அதிமுகவில் நடைபெற்று வந்த அதிகார மோதல் உச்சநீதிமன்ற உத்தரவையடுத்து எடப்பாடி பழனிசாமி தான் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் என உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்ற பொதுக்குழு வழக்கின் மீதான தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது 11. 7 .2022 அன்று நடைபெற்ற பொதுக்குழு சட்டத்திற்கு உட்பட்டு நடைபெற்றது என்றும், அதன் மீது எந்த விதமான உத்தரவு பிறப்பிக்க தேவையில்லை என்றும், தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களும் முடித்து வைக்கப்படுவதாகவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் அதிமுகவில் கடந்த ஜூன் மாதம் முதல் தற்போதைய தீர்ப்பு வரை நடைபெற்றதை பார்க்கலாம்...

அதிமுக பொதுக்குழு செல்லும்.. ஓபிஎஸ் மனு தள்ளுபடி.. உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!

What happened in AIADMK from the General Assembly to the Supreme Court final verdict

2022 ஜூன் 2 

அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் ஜூன் 23 ல் தற்காலிக அவைத் தலைவர் அ. தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெறும் என ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் அறிவிப்பு


2022 ஜூன் 14 

மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஒற்றைத்தலைமை குறித்து பெரும்பாலானோர் பேசியதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளித்த நிலையில் ஓபிஎஸ் தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது 

2022 ஜூன் 16

ஒற்றைத் தலைமை குறித்த குழப்பம், தனக்கு மிகப்பெரிய வருத்தம் அளிப்பதாகவும், 14 பேர் கொண்ட உயர்மட்ட குழுவின் முடிவுக்கு தலை வணங்குவேன் என்றும் ஓ.பி.எஸ் அறிவிப்பு.

2022 ஜூன் 19

பொதுக்குழு தீர்மானங்களை இறுதி செய்ய நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர். இதில்ஓபிஎஸ்-  இ.பி.எஸ் இருவரும் இல்லங்களில் தனி தனியாக ஆலோசனை நடத்தினர். மேலும் முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகளிடம் இரண்டு தரப்பினரிடமும் அமைதி பேச்சு வார்த்தை நடத்தினர்.

2022 ஜூன் 22:

சென்னையை அடுத்துள்ள வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி மண்டபத்தில் நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழுவுக்கு அனுமதி வழங்கக்கூடாது என ஓ.பி.எஸ் ஆவடி மாநகர காவல் ஆணையரிடம் வழங்கிய மனு நிராகரிப்பு. அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்த தடை இல்லை என்றும் 23 தீர்மானங்களை மட்டுமே விவாதிக்க வேண்டும் என உயர்நீதி மன்றம் உத்தரவு.

தந்தை பெரியார் படத்தை உடைத்து மாணவர்களை தாக்குவதா.? ஏபிவிபி அமைப்பு மீது நடவடிக்கை எடுத்திடுக- சீறிய ஓபிஎஸ்

What happened in AIADMK from the General Assembly to the Supreme Court final verdict


2022 ஜூன் 23:

பொதுக்குழு கூட்டத்திற்கு இ.பி.எஸ் – ஓ.பி.எஸ் வருகை, பொதுக்குழு கூட்டத்தில் ஓபிஎஸ்க்கு எதிர்ப்பு- தண்ணீர் பாட்டில் வீச்சு,  தமிழ்மகன் உசேன், நிரந்தர அவைத் தலைவராக நியமனம். ஓபிஎஸ் ஒப்புதல் அளித்த தீர்மானங்கள் நிராகரிப்பு. பொதுக்குழுவில் இருந்து ஓ.பி.எஸ், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன்  உள்ளிட்ட நிர்வாகிகள் வெளிநடப்பு செய்தனர். 

2022 ஜூன் 24:

ஒருங்கிணைப்பாளரான தன் கையெழுத்தின்றி ஜூலை 11- ம் தேதி அதிமுக பொதுக்குழுவை கூட்ட முடியாது என தேர்தல் ஆணையத்தில் ஓ.பி.எஸ் முறையீடு

2022 ஜூன் 28:

ஓ.பி.எஸ் புகாருக்கு தேர்தல் ஆணையத்தில் இ.பி.எஸ் பதில் மனு தாக்கல், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலை பொதுக்குழு அங்கீகரிக்கவில்லை. பெரும்பான்மையான பொதுக்குழு உறுப்பினர்கள் ஒற்றைத் தலைமைக்கு வற்புறுத்தியதால், ஓ.பி.எஸ் அடிக்கடி தனது நிலைப்பாட்டை மாற்றுகிறார் என குற்றச்சாட்டு.

What happened in AIADMK from the General Assembly to the Supreme Court final verdict

2022 ஜூலை 6

அதிமுக பொதுக் குழு உட்கட்சி விவகாரம் தொடர்பாக தடை விதிக்க இயலாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

2022 ஜூலை 7 

பொதுக்குழுவுக்கு தடையில்லை: கட்சி விவகாரங்களில் நீதிமன்றம் தலையிடாது இ.பி.எஸ்-க்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தள்ளுபடி என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

2022 ஜூலை 11:

பொதுக்குழுவுக்கு தடையில்லை என தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி தீர்ப்பு வழங்கினார். இதையடுத்து, அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக இபிஎஸ் தேர்வு என அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் அறிவிப்பு. பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற போது  ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன்  அதிமுக தலைமை அலுவலகம் சென்றார். செல்லும் வழியில் ஓபிஎஸ்- இபிஎஸ் ஆதரவாளர்கள் மோதல்,  அதிமுக அலுவலகத்துக்கு வருவாய் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். ஓ.பன்னீர் செல்வத்தை எடப்பாடி பழனிசாமியும், எடப்பாடி பழனிசாமியை ஓ.பன்னீர் செல்வமும் கட்சியை விட்டு நீக்கவுதாக அறிவிப்பு

What happened in AIADMK from the General Assembly to the Supreme Court final verdict

2022 ஆகஸ்ட் 5:

நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி குறித்து ஓ.பி.எஸ் அதிருப்தி. வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரிக்கு கடிதம். நீதிபதியிடம் ஓ.பி.எஸ் மற்றும் வைரமுத்துவும் மன்னிப்பு கேட்டனர். நீதிபதி ஜெயசந்திரன் அமர்வில் ஆகஸ்ட் 10 , 11-ம் தேதிகளில் விசாரணை.

2022 ஆகஸ்ட் 17 

ஜூலை 11-ம் தேதி, நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லாது, என்று நீதிமன்றம் தீர்ப்பு

2022 செப்டம்பர்

தனி நீதிபதியின் தீா்ப்பை எதிா்த்து எடப்பாடி பழனிசாமி சாா்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு. செய்யப்பட்டது. இந்த வழக்கில் தனிநீதிபதி ஜெயச்சந்திரன் அளித்த தீர்ப்பை ரத்து செய்து,  ஜூலை 11 அன்று நடந்த பொதுக்குழு செல்லும் என இரு நீதிபதிகள் தீர்ப்பு 

2022 செப்டம்பர் 06 

எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக கிடைத்த இரு நீதிபதிகள் தீர்ப்பை எதிர்ப்பு ஓ.பன்னீர்செல்வம் தரப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு 

What happened in AIADMK from the General Assembly to the Supreme Court final verdict

2022 அக்டோபர் 01 

அதிமுக பொதுக்குழு தொடர்பாக ஓ பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் வழக்கு விசாரணை நிறைவடையும் வரை அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த மாட்டோம் என எடப்பாடி பழனிசாமி தரப்பு உறுதி

2022 அக்டோபர் 10 

அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வான பிறகு அவரது தலைமையில் முதல் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. 

2023 ஜனவரி 10, 11 

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் இபிஎஸ் ஓபிஎஸ் ஆகிய இரு தரப்பும் தங்களுடைய வாதங்களை நிறைவு செய்தன தீர்ப்பு  தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது

2023 ஜனவரி 18

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 27-ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு

2023 ஜனவரி 29 

ஈரோடு தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருப்பதால் இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி இடையீட்டு மனு

2023 பிப்ரவரி 01 

ஓ பன்னீர்செல்வம் தலைமையிலான அணியில் ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக வேட்பாளராக செந்தில் முருகன் போட்டியிடுவார் என அறிவிப்பு

What happened in AIADMK from the General Assembly to the Supreme Court final verdict

2023 பிப்ரவரி 03 

அதிமுக வேட்பாளரை பொதுக்குழு கூடி தேர்வு செய்ய வேண்டுமென எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்த இடையீட்டு மனு மீதான வழக்கில் உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு

2023 பிப்ரவரி 06 

ஓ பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுகவின் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செந்தில் முருகன் தேர்தலில் இருந்து விலகுவதாக ஓபிஎஸ் தரப்பு அறிவிப்பு

2023 பிப்ரவரி 06

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி அடிப்படையில் அதிமுக வேட்பாளர் தென்னரசு என  பெரும்பாலான பொதுக்குழு உறுப்பினர்களின் ஒப்புதலை பெற்று அவை தலைவர் தமிழ் மகன் உசேன் தேர்தல் ஆணையத்தில் அதற்கான கடிதத்தை வழங்கினார். அதிமுகவிற்கு வாக்கு சேகரிப்போம் ஆனால் தென்னரசுக்கு வாக்கு சேகரிக்க மாட்டோம் என ஓபிஎஸ் தரப்பு தகவல்

2023 பிப்ரவரி 06 

எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவு. வேட்பாளரை தேர்வு செய்யப்படுவதில் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேனுக்கு அதிகாரம்

2023 பிப்ரவரி 

அதிமுக வேட்பாளர் தென்னரசுவுக்கு ஆதரவாக எடப்பாடி பழனிச்சாமி உட்பட முன்னாள் அமைச்சர்கள் மூத்த நிர்வாகிகள் மாவட்டச் செயலாளர்கள் என அனைவரும் ஈரோடு கிழக்கு தொகுதியில் தொடர் பிரச்சாரம்

2023 பிப்ரவரி 23 

அதிமுக பொதுக்குழு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் இறுதி தீர்ப்பை வழங்கியது. இந்த தீர்ப்பில் சென்னை உயர் நீதிமன்ற பொதுக்குழு வழக்கின் மீதான தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும்  11. 7 .2022 அன்று நடைபெற்ற பொதுக்குழு சட்டத்திற்கு உட்பட்டு நடைபெற்றது என்றும், அதன் மீது எந்த விதமான உத்தரவு பிறப்பிக்க தேவையில்லை என்று தெரிவித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பில்  தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களும் முடித்து வைத்து  உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்

வீம்புக்கு வம்பிழுத்து வீணான அவதூறுகளை பரப்பும் பாஜக.! சனாதன சக்திக்கு எதிராக போராட்டம்- தேதி குறித்த திருமா

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios