Asianet News TamilAsianet News Tamil

காவிரி மேற்பார்வை வாரியமா...? என்ன சொல்கிறது அதிமுக...?

What does AIADMK say about cauvery issue
What does AIADMK say about cauvery issue
Author
First Published Mar 25, 2018, 3:32 PM IST


உச்சநீதிமன்ற தீர்ப்பிலே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என தெளிவாக குறிப்பிட்டுள்ளதாகவும் எனவே கண்டிப்பாக வரும் 29 ஆம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் மத்திய அரசு அமைக்கும் என நம்புவதாகவும் மீன்வளத்துறை  அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

காவிரி நதிநீர் பிரச்சனையில் இறுதித் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் 6 வாரங்களுக்கும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

இது தொடர்பாக தமிழக சட்டமன்றத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும்  நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வரும் 30 ஆம் தேதி வரை உச்சநீதிமன்றம் கெடு விதித்துள்ளது. 

இதைதொடர்ந்து காவிரி மேலாண்மை வாரியத்திற்கு பதில் காவிரி மேற்பார்வை ஆணையம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 

மெத்தம் 9 பேர் கொண்ட காவிரி மேற்பார்வை ஆணையம் அமைக்கப்படும் என்று நீர்வளத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. இதில் 5 முழு நேர உறுப்பினர்களும், மாநிலங்களைச் சேர்ந்த 4 பகுதி நேர உறுப்பினர்களும் இடம்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

காவிரி மேற்பார்வை ஆணையத்தை அமைப்பதை தவிர வேறு வழியில்லை என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.

இதனிடையே ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ டிடிவி காவிரி மேற்பார்வை ஆணையம் தேவையில்லை எனவும் மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். 

காவிரி மேற்பார்வை ஆணையத்தை அதிமுக அரசு ஏற்க கூடாது என எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. 

இந்நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்பிலே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என தெளிவாக குறிப்பிட்டுள்ளதாகவும் எனவே கண்டிப்பாக வரும் 29 ஆம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் மத்திய அரசு அமைக்கும் என நம்புவதாகவும் மீன்வளத்துறை  அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

மேலும் இதற்காக மத்திய அரசை தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் குறிப்பிட்டார். 

Follow Us:
Download App:
  • android
  • ios