சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள சிபிஎம் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பது தொடர்பாக திமுக குழுவுடன் சிபிஎம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. சில தொகுதிகளைப் பெறுவதில் இரு கட்சிகளுக்கும் இடையே இழுபறி இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. ஆனால், நேற்று இரவு சிபிஎம்-திமுக இடையே பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்று கையெழுத்தாகின.
இதன்படி மார்க்ஸிட் கம்யூனிஸ்ட் கட்சி, திருப்பரங்குன்றம், அரூர், கந்தவர்வகோட்டை (தனி), திண்டுக்கல், கோவில்பட்டி, கீழ்வேளூர் ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் கீழ்வேளூர் தொகுதியில் பாமகவை எதிர்த்து சிபிஎம் களமிறங்கிறது. எஞ்சிய 5 தொகுதிகளில் அதிமுகவுடன் மல்லுக்கட்டுகிறது சிபிஎம்.