Asianet News TamilAsianet News Tamil

அதிமுக கூட்டணியில் பாமக போட்டியிடும் 23 தொகுதிகள் எவை..? பட்டியல் இதோ..!

அதிமுக கூட்டணியில் பாமக போட்டியிடும் 23 தொகுதிகள் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
 

What are the 23 constituencies in which AIADMK is contesting? Here is the list ..!
Author
Chennai, First Published Feb 28, 2021, 10:09 PM IST

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த மாதம் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 35 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடுகளில் திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் தீவிரம் காட்டிவருகின்றன. அதிமுக கூட்டணியில் முதல் கட்சியாக பாமகவுடன் தொகுதி பங்கீடு நேற்று நடைபெற்றது. தொகுதி பங்கீட்டில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம், ஜி.கே.மணி, அன்புமணி ஆகியோர் கையெழுத்திட்டனர்.What are the 23 constituencies in which AIADMK is contesting? Here is the list ..!

பாமகவுடன் தொகுதி பங்கீடு முடிந்துவிட்ட நிலையில், தேமுதிக, பாஜக உள்ளிட்ட கட்சிகளுடன் அதிமுக பேசிவருகிறது. எனவே, அனைத்துக் கட்சிகளுடனும் தொகுதி பங்கீடு முடிந்த பிறகு, அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடும் என்ற விவரம் அறிவிக்கப்படும் என்று அதிமுக  தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது அதிமுக கூட்டணியில் பாமக போட்டியிடும் 23 தொகுதிகள் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளன.  What are the 23 constituencies in which AIADMK is contesting? Here is the list ..!
இதன்படி கும்மிடிப்பூண்டி, திருத்தணி, எழும்பூர், செங்கல்பட்டு, திருப்போரூர், சோளிங்கர், ஆற்காடு, ஓசூர், பாப்பிரெட்டிப்பட்டி, பென்னாகரம், ஆரணி, கலசப்பாக்கம், அணைக்கட்டு, திண்டிவனம், விக்கிரவாண்டி, சங்கராபுரம், மேட்டூர், வீரபாண்டி, குன்னம், ஜெயங்கொண்டம், பண்ருட்டி, நெய்வேலி, காட்டுமன்னார்கோயில் ஆகிய தொகுதிகளில் பாமக போட்டியிடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. பாமக இந்த முறை வட தமிழகத்தில் மட்டுமே போட்டியிடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios