தரமான கல்வியை தருவதே எனது முதல் கொள்கை எனவும் என்னுடன் முடியும்கட்சி அல்ல எனவும் நடிகர் கமலஹாசன் தெரிவித்துள்ளார். 

நடிகர் கமலஹாசன் இன்று மதுரை ஒத்தக்கடையில் தமது கட்சியின் கொடியை ஏற்றி வைத்து மக்கள் நீதி இயக்கம் என்ற தனது கட்சியின் பெயரை அறிவித்தார். 

பின்னர் தனது அரசியல் கொள்கைகளை அறிவித்தார். அதில், தரமான கல்வியை தருவதே எனது முதல் கொள்கை எனவும் என்னுடன் முடியும்கட்சி அல்ல எனவும் நடிகர் கமலஹாசன் தெரிவித்துள்ளார். 

இனி என் எஞ்சிய வாழ்க்கை உங்களுக்காகவே எனவும் தமது கட்சி தேர்தல் ஆணையத்தில் பதிவாகிவிட்டது எனவும் குறிப்பிட்டார். 

குறைந்தது மூன்று, நான்கு தலைமுறைக்கு நீடிக்க வேண்டிய கட்சி  இது எனவும் வேலைவாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார். 

நான் மட்டும் ஊழலை ஒழிக்க முடியாது எனவும் நாம் சேர்ந்துதான் ஒழிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.