ஹைதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் நடிகர் ரஜினி இன்று காலை அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அண்ணாத்த படப்பிடிப்பில் பங்கேற்றிருந்த நான்கு பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் படப்பிடிப்பு நிறூத்தப்பட்டது. இதையடுத்து ரஜினிகாந்த் தன்னை தனிமைப் படுத்திக்கொண்டார். இந்நிலையில் உடல்நிலை குறைபாடு ஏற்பட்டதால், கொரோனா இருக்குமோ என்ற அச்சத்தில் ரஜினிகாந்த் ஐதராபாத்தில் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பரிசோதனையில் ரஜினிக்கு கொரோனா இல்லை என்றும், கொரோனா அறிகுறிகளும் இல்லை என்றும் தெரியவந்துள்ளது ஆனால், உடல் சோர்வினால் ரத்த அழுத்தத்தில் மாறுபாடு ஏற்பட்டிருக்கிறது. ரத்த அழுத்தம் சீராகும் வரை அவர் மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருக்க வேண்டும் என்றும், ரத்த அழுத்தம் சீரான பின்னரே அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டிருக்கிறது.