பாஜக நிர்வாகி கல்யாண ராமனுக்கு எதிரான வழக்கை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விரைந்து முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

பாஜக நிர்வாகி கல்யாண ராமனுக்கு எதிரான வழக்கை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விரைந்து முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, இந்நாள் முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்டோர் குறித்து அவதூறாக பேசியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த வழக்கறிஞர் அணி நிர்வாகி தொடுத்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழக பாஜகவில் எச்.ராஜாவையே விஞ்சும் அளவிற்கு வெறுப்பு பேச்சை பேசக்கூடிய ஒருவர் உண்டென்றால் அது கல்யாணராமன் என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு எவரையும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று மிகவும் தரக்குறைவாக பேசக் கூடியவராக கல்யாணராமன் இருந்து வருகிறார்.

இதையும் படியுங்கள்: AIADMK: ஓபிஎஸ் கொள்ளையடித்த பணம் புதுச்சேரியில் இருக்கு.. அதிமுக பிரமுகர் சொன்ன அதிர்ச்சி தகவல்

மதரீதியாக இரு பிரிவினர் இடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டார் என்ற வழக்கில் ஏற்கனவே 2 முறை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர் கல்யாணராமன்.

ஏற்கனவே நீதிமன்றம் கல்யாணராமனை சரமாரியாக கண்டித்துள்ளது, கல்யாணராமன் நீதிமன்றத்தை மதிக்க மாட்டார், காவல்துறையை மதிக்க மாட்டார், சட்டத்தை மதிக்க மாட்டார் கல்யாணராமன் என்ன சட்டத்திற்கு அப்பாற்பட்டவரா என நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தது.

ஏற்கனவே இதே போன்ற ஒரு வழக்கு ஒன்றில் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசமாட்டேன் என்று மனுத் தாக்கல் செய்துவிட்டு மீண்டும் கல்யாணராமன் தொடர்ந்து அப்படி பேசி வருவதாக அவர் மீது வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மத மோதலை உருவாக்கும் வகையில் ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு எதிராக அவர் பேசி வருவதாகவும், அவர் மீது பல புகார்கள் இருந்து வருகின்றன.

இதையும் படியுங்கள்: 750 கோடி முறைகேடு.. சிக்குவாரா செல்லூர் ராஜூ ?அமைச்சர் ஐ.பெரியசாமி சொன்ன அதிர்ச்சி தகவல்

இப்படிப்பட்ட சர்ச்சைக்குரிய நபர்களில் ஒருவரான கல்யாணராமன் பெண் பத்திரிகையாளர்கள், முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி மற்றும் முஸ்லீம் கிறிஸ்தவ மக்களுக்கு எதிராக தொடர்ந்து வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசி வருவதாகவும் அவரது பேச்சுக்கள் அருவருக்கத்தக்க வகையில் இருந்து வருவதாகவும் கூறி அவருக்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் வழக்கறிஞர் அணி நிர்வாகியுமான எம்.கோபிநாத் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.

தான் அளித்த புகாரில் வழக்கு பதிவு செய்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அவரை கைது செய்ததாகவும், பின்னர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டதாகவும் தனது மனுவில் தெரிவித்திருந்தார்.

சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட அவர் இனி அவதூறாகப் பேச மாட்டேன் என நிபந்தனை வாக்குறுதி கொடுத்ததாகவும், அதையெல்லாம் மீறும் வகையில் தொடர்ந்து அவர் பேசி வருவதாகவும், தனது மனுவில் சுட்டிக்காட்டினார்.

எனவே கல்யாண ராமனுக்கு எதிரான வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று மத்திய குற்றப்பிரிவு காவல்துறையில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து விசாரித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் அடுத்த மூன்று மாதத்திற்குள் கல்யாண ராமனுக்கு எதிரான வழக்கில் விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார். இது கல்யாண ராமணுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.