அமைச்சரை அதிகாலையில் அதிரடியாக கைது செய்த அமலாக்கத்துறை... அதிர்ச்சியில் இண்டியா கூட்டணி
உணவுத்துறையில் முறைகேடு தொடர்பாக நேற்று மேற்கு வங்க மாநில அமைச்சர் ஜோதிப்ரியா வீட்டில் அமலாக்கத்துறை விசாரணை நடத்திய நிலையில் இன்று அதிகாலை கைது செய்துள்ளது.
தீவிர சோதனையில் அமலாக்கத்துறை
அமலாக்கத்துறை கடந்த சில மாதங்களாக பல்வேறு மாநிலங்களில் விசாரணை நடத்தி கைது நடவடிக்கையை தீவிரப்படுத்தி வருகிறது. அந்த வகையில் ம்துமான ஊழல் தொடர்பாக டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, சத்யேந்தர் ஜெயினை கைது செய்ததது. இதனை அடுத்து போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக கூறி தமிழக மின்சாரத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியையும் கைது செய்து அதிரடி காட்டியது.
இந்த பரபரப்புக்கு மத்தியில் திமுகவின் மூத்த அமைச்சராக பொன்முடி வீட்டிற்குள் புகுந்த அமலாக்கத்தை இரண்டு நாட்கள் தீவிர சோதனை நடத்தி அமைச்சர் பொன்முடியை அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்து சென்று தொடர் விசாரணைக்கு பிறகு விடுவித்தது.
மேற்கு வங்க அமைச்சர் கைது
இந்தநிலையில் அடுத்ததாக மேற்கு வங்க மாநிலத்தை அமலாக்கத்துறை குறிவைத்து விசாரணை நடத்தியது. அந்த வகையில் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் வனத்துறை அமைச்சராக இருப்பவர்ஜோதிப்ரியா மல்லிக், இவர் இதற்கு முன்பு உணவுத்துறை அமைச்சராக பணியாற்றி வந்தார். அப்போது உணவு பொருட்கள் விநியோகத்தில் முறைகேடு நடந்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து பல கோடி ரூபாய் மோசடி என அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் அமலாக்கத்துறை நேற்று காலை அமைச்சர் ஜோதிப்ரியா மல்லிக்கிற்கு கொல்கத்தாவின் சால்ட் லேக் பகுதியில் உள்ள சொந்தமான 2 வீடு மற்றும் அவர் தொடர்புடைய பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டது. அவரது உதவியாளர் உள்ளிட்ட 8 பேர் வீடுகளிலும் இந்த சோதனை நடந்தது.
அதிர்ச்சியில் இந்தியா கூட்டணி
ஏற்கனவே இந்த வழக்கு தொடர்பாக அமைச்சர் ஜோதிப்ரியா மல்லிக்கிற்கு நெருக்கமான நபர் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் இன்று அதிகாலை அமைச்சர் ஜோதிப்ரியா மல்லிக்கையும் அமலாக்கத்துறை கைது செய்து விசாரணைக்கு அழைத்து சென்றது. அப்போது செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த ஜோதிப்ரியா மல்லிக் மிகப்பெரிய சதிக்கு பலிகடாவாக்கப்பட்டுள்ளேன் என தெரிவித்தார். இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளை சார்ந்த அமைச்சர்கள் ஒன்றன் பின் ஒன்றாக கைது செய்யப்படுவது இந்தியா கூட்டணி நிர்வாகிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படியுங்கள்
தொழில்முனைவை ஊக்குவிக்கும் ஸ்வநிதி திட்டம்; ரூ.9,152 கோடி கடன் - பிரதமர் பாராட்டு!